Sunday, March 29, 2015

வறட்சியா?வளமையா?



                              வற்றாத நதி பாயும்  மண்ணில்
                              வறண்டு  கிடக்குதொரு  பகுதி
               
                              வாழ வழியில்லா மனிதனோடு
                              வாயில்லா  ஜீவனும்  வாடுது

                              வழி  நாமும்  காண்பதெவ்வாறு?

                               வாய்க்கால்  வழியோடினால்
                              புல்லுக்கேனும்  பொசியட்டும்.



                              நதி நீர்  இணைப்பே,
                              வறட்சி  ஓட்டும்,
                              வறுமை  தீர்க்கும்,
                             நிலம்  செழிக்கும்,
                             வளம்  கொழிக்கும்.


                             
            

Thursday, February 6, 2014

வாசிப்பு மடலல்ல,நேசிப்பு மடல்

இது வெறும் வாசிப்பு அல்ல,

மனதின் நேசிப்பு.

இது முகஸ்துதி அல்ல.

எந்தன் அக, துதி.

வாழ்வில் சிலர் நண்பர்களாயிருக்கலாம்,

சிலர் நல்வழிகாட்டலாம்,

சிலர் அறிவுரை கூறலாம்.

எந்தன் FRIEND ,PHILOSOPHER,GUIDE

நீங்களே.

பழகிய காலம் சிறிதாயினும்
,
பல்வேறு தருணங்களிலும்

பக்கபலமாய் இருந்தது –இவரின்

பண்பான  வார்த்தைகள்.

நல்லதொரு குடும்பச்சூழல் தந்த

நனி நாகரீகமான சொற்களை அமைத்து

அணிந்துரை தந்தீர்கள் என் வரிகளுக்கு,

என் வரிகள் அணி செய்து,அலங்கரிக்கட்டும்,

உந்தன் இரண்டாம் வசந்த காலத்திற்கு,


ஒய்வா? பணிநிறைவா? யார் சொன்னது?

கரைந்து கரைந்து கணிதம் சொன்ன வகுப்பறை

ஆர்வம் நிறைந்து ஆங்கிலம் சொன்ன வகுப்பறை

பாங்கான பதவி உயர்வுக்கு

வாழ்த்தி வழியனுப்பிய தருணங்கள்
,
இதற்கு மட்டுமே காலம் தந்திருக்கும்

கட்டாய ஒய்வு,

நீவீர் இழந்திருப்பது

ஒரு பூங்காவை மட்டுமே,

வாங்கியிருப்பதோ வான மண்டலம்.

வாழ்வு பிழிந்து பொருள் எடுங்கள்,

வானம் பிழிந்து மை எடுங்கள்.

நீளாயுள்,நிறை செல்வம்,உயர் புகழ்

மெய்ஞானம் பெற்று வாழ

இறைநிலையைப் பிரார்த்திக்கிறேன். 

                            நன்றி ; ( கவிப் பேரரசு )

Wednesday, September 11, 2013

சரித்திரத்தை மாற்ற நினைத்த சதுரங்கப் பெட்டி




                    மாவீரன்  நெப்போலியன்  செயின்ட் ஹெலினா  தீவில்  சிறை வைக்கப்பட்டிருந்த போது  அவரைக் காண வந்த  நண்பர் ஒருவர் விலை  உயர்ந்த  சதுரங்கப் பெட்டி ஒன்றைப் பரிசளித்தார். நெப்போலியன்  அதனை வைத்து தனியாகவே விளையாடி மகிழ்ந்தார்.கி.பி.1821ல் நெப்போலியன் மறைவுக்குப் பிறகு ,அது ஏலத்தில் விடப்பட்டது.பலர் கைகளுக்கு மாறியது.அதை வைத்திருந்த ஒருவர் தற்செயலாகத் திருகிய பொழுது, அது திறந்து கொண்டது.அதனுள் ஹெலீனா தீவிலிருந்து தப்பித்துச் செல்வஙதற்கு வழிகாட்டக்கூடிய வரைபடம் இருந்தது.துரதிர்ஷ்டவசமாக நெப்போலியன் திறந்து பார்க்கவில்லை.அவ்வாறு பார்த்திருந்தால் அவர் தப்பித்திருந்திருப்பார்.சரித்திரமே மாறியிருக்கும்.

                                         முத்துமாணிக்கம்,கிருஷ்ணன்கோவிலிலிருந்து.
                                         (பெற்றோர் ஆசிரியர்கழகச் செய்தியிலிருந்து)

Sunday, April 14, 2013

தமிழ் மகளே !தலை மகளே !




§  சித்திரையே!
§  தமிழ் மாதத் தலைமகளே!! மன
§  நித்திரை நீக்கிடும் பொன்மகளே!! இனிய
§  முத்திரை பதித்திடு பூமகளே !! உன்
§  வரவால் உளம் பூரிக்குமே!!
§  வளமே தந்திட்டு வாழ்வளிப்பாய்!!
o   வானகமே! புகழ் வையகமே!!உன்
o   வரவாலே வாழ்வில் வசந்தமே......

                                    

Sunday, January 13, 2013

பொங்குக பொங்கல்


                             பொங்குக  பொங்கல்
                             தங்குக  மங்கலம்
                           
                             நாடு முழுவதும் சங்கராந்தி
                             மங்கலம் தந்திடும் மனசாந்தி

                            இயந்திர வாழ்வின் இயக்கத்திலே
                            இனிமை  சேர்த்திடும் இனிய விழா

                            இயற்கையை  வணங்கிடும்
                            இன்ப  விழா!
                            இருளை நீக்கி ஒளியை ஏற்றும்
                            இரவியின் கதிரைப் போற்றும் விழா!

                  இனிமை பொங்குக!

                  வளமை  தங்குக!

                        
                        

Sunday, December 16, 2012

சொர்க்கம்-நரகம்

                                 
                                    வாழும்  நாளிலே
                                    வளமாயிருந்தால்
                                    வாழ்வு சொர்க்கம்

                                   வளம் குன்றிப் போனால்
                                   அதுவே நரகம்.

                                    வளமென்பது,
                                    பொருள் வளமட்டுமல்ல,
                                    மன வளம்,ஆன்ம நலம்
                                    மன நலமே ஆன்ம பலம்
                                   

                                   அன்பிலே அடித்தளமிட்ட ஆன்மா
                                   ஆயுட்காலத்திலே அனுபவிக்கும்
                                    சொர்க்கம்!
                                    அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை
                                    நாளும் நரகமே.
                             

Saturday, November 24, 2012

பிரபஞ்சம்



                       வியப்பு ! 
                       
                       மலைப்பு !

                       பிரமிப்பு  !

                       வியப்பின் ,மலைப்பின் ,பிரமிப்பின்  அடிநாதம்
                        
                      அன்பு  !

                      உயரிய  பண்பு !