ஆற்றல் நிறை அக்கினியே!
ஆகாததை அழிப்பாயே,
ஆக்கந் தரும் அக்கினியே !
ஆக்கியும் உயிர் காப்பாயே.
ஆவதும் உன்னாலே,
அழிவதும் உன்னாலே,
அதனால்,நீ அக்னி மங்கையோ!
சக்தியின் வடிவே,
சஞ்சலம் போக்குவாய்!
சுடர் விடும் ஜோதியே
சுகமே ஆக்குவாய்!
Friday, November 5, 2010
Thursday, November 4, 2010
திருமலையில் திருவிழா
அம்மம்மா !ஆனந்தம்
அப்பப்பா ! பரவசம்
அழகுக் காட்சி!அதிசயக் காட்சி!
அதனைப் பருகிய கண்களே சாட்சி!
தேவலோகக் காட்சி கண்டேன்
மஞ்சள் தங்கங்களாய்
சோடியம் விளக்குகள்
மின்னும் வைரங்களாய்
வெள்ளொளி வெளிச்சங்கள்
மலை மீது முகில்கள் கூட்டம்
பிரதிபலித்ததே கண்ணாடியாய்
விண்மீன் கூட்டத்தை வீதியிலும்
வீதியின் வெளிச்சங்களை
விண்மீனின் கூட்டங்களுமாய்
கண்கள் பருகிய காட்சியை
அகத்திலும் நிறைத்ததாலே
ஆனந்தக் களிப்பு!
அப்பப்பா ! பரவசம்
அழகுக் காட்சி!அதிசயக் காட்சி!
அதனைப் பருகிய கண்களே சாட்சி!
தேவலோகக் காட்சி கண்டேன்
மஞ்சள் தங்கங்களாய்
சோடியம் விளக்குகள்
மின்னும் வைரங்களாய்
வெள்ளொளி வெளிச்சங்கள்
மலை மீது முகில்கள் கூட்டம்
பிரதிபலித்ததே கண்ணாடியாய்
விண்மீன் கூட்டத்தை வீதியிலும்
வீதியின் வெளிச்சங்களை
விண்மீனின் கூட்டங்களுமாய்
கண்கள் பருகிய காட்சியை
அகத்திலும் நிறைத்ததாலே
ஆனந்தக் களிப்பு!
Tuesday, November 2, 2010
வரம்
சின்னக் கை
சிங்காரக் கை
தத்தித் தத்தி வந்து தளிர்நடை
போட்டு வந்து எம் கரம்
பற்றினாய்!
இறைவன் வாழ்வில் தந்த
வரம்!
பிஞ்சுக் கைகளை நம்
பஞ்சு விரல் பற்றி
அழைத்துச் செல்வோம்
அழகான வாழ்வுக்குள்
அமைத்துத் தருவோம்
அன்பு ததும்பும் வாழ்வினை!
அற்புத உலகில் அமைக்கட்டும்
அன்பு சாம்ராஜ்யம்!
இறைவன் நமக்களித்த
வரத்திற்கு
வரமாய் மாறும் தவம் புரிவோம்!
ஈன்ற பொழுதினும்
பெரிதுவக்கட்டும்,
இவன் தாய்!
இவன் தந்தை எந் நோற்றான்?
இயம்பட்டும் இனிமையாய்
இவ்வுலகு!
Monday, November 1, 2010
நல்லார் ஒருவர் உளரேல்....
அருமையான நடவடிக்கை.அழகழகாய்த் திட்டங்கள்.கேட்கும் போதே செவியெல்லாம் குளிர்ந்து சிந்தை மலர்கிறது.
இந்தப் படத்தைப் போல் அவர் இதயமும் இமயமே! ஆம்,முப்பத்தேழு ஆண்டுகாலப் பணி ஆட்சியராக.இப்பொழுது ஆட்சி ,பள்ளிகளின் தரம் உயர்த்துவதிலே!
நேரடியாகச் சொன்னாலே எதுவும் நேராதது போலிருப்போரையே பார்த்துப் பழக்கப் பட்ட எங்களுக்கு சொல்லலாமா?வேண்டாமா?என யோசித்து,பக்கத்தில் சோல்லிக் கொண்டிருந்த விஷயம் கூட பட்டென்று பரீசீலிக்கப் பட்டது வியப்பையே ஏற்படுத்தியது.
" MORAL COURAGE" வார்த்தையே அதி அற்புதம்.ஆனால் நல்லவர்களாக இருப்பது கடினம் என்று தாங்கள் சொன்னதையே சொல்லி முடிக்கின்றேன்.
' வாழ்க வளமுடன்' விஜயகுமார் சார்!
Subscribe to:
Posts (Atom)