பாரதத் தாயே !
அந்நியரின் தாக்குதலாலே
அவதியுற விடாது
முப்படை வீரரும்
முழு மூச்சுடன் காப்பரே!-இம்
மண்ணில் இருந்தே உனை
இன்னல் செய்வோரை
என்ன செய்வது?
நாட்டோரே உனை
நாசம் செயும்போது உனக்கு
எங்கிருந்து வரும் சுவாசம்?
நித்தம் ஒரு
சாதிச் சண்டை,
நாளும் ஒரு
மதக் கலவரம்.
குருதி கொதிக்கிறது -ஆனால்
கும்பிட்டு வழி விடுகிறோம்
கொலை பாதகரைக் கண்டு
உனது உடலெல்லாம்
இரண களம்-உன்னை
மலரால் வருடிவிட
நீட்டிய கைகளை
மத வெறியன் வெட்டினான்
சந்தனம் பூசிவிட
நீட்டிய கைகளை
சாதி வெறியன் சிதைத்தான்
சந்தனம் ,மலரோடு
குருதியும் மண்ணில்
உனக்கு அபிஷேகமாய்!
மாறுமா?மறையுமா?
மகிழ்வான நிலை மலருமா?
இந்திய அன்னையே,
புகழ் வடிவான உன்னை
புண்ணாக்குகின்றனர் புல்லர்கள்
புல்லர்களை அழித்துப்
புரட்சி செய்யும் போது தான்
புனிதம் பெறுவாயோ?
Tuesday, November 16, 2010
Monday, November 15, 2010
மன சாம்ராஜ்யம்
மன சாம்ராஜ்யத்தின் மன்னனே!
ஆகாயம் நீ -உன்னுள்ளே
அகில உலகும் அடங்கட்டும்!
கிருஷ்ணனாய் லீலைகள் காட்டு,
கிருஷ்ண லீலா காட்டாதே!
உங்கு உங்கென்று உன் சங்கநாதம்
முழங்கினால்,
தமிழ் கூடக் கசக்கிறதே.
தமிழாலே தாலாட்டுவேன்
தமிழாலே சீராட்டுவேன்
தரமாய் வளர்ந்திடு!
தமிழோடு வளர்ந்திடு!!
தன்னிகரற்று வாழ்ந்திடு!!!
பஞ்சுப் பொதியே,அஞ்சுகமே
அஞ்சாமல் வாழ்ந்திடு!
அஞ்சி ஒதுக்கு ஆகாததை.
ரோஜாக் குவியலே-எங்கள்
ராஜா நீ !
Sunday, November 14, 2010
பணி
செய்யும் தொழில் ?
தெய்வமெனப் போற்றாவிடினும்
தெற்றினை அகற்றிடுவோம்
பற்றுக் கொள்வோம் பணி மீது.
எப்பணி ஏற்றிடினும்
அப்பணி அழகாக்கு
தப்பினி நேர்ந்திடாது
என எண்ணித் தயங்காது
காரியமாற்று.
தனித்தன்மையான பணி
தரணி போற்றும் பணியாகும்.
Subscribe to:
Posts (Atom)