நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Friday, March 11, 2011
முத்தும் ,கிளிஞ்சலும்
முத்தே ,
சிப்பியின் வயிற்றினிலே
நன்னீராய்க் கருக்கொண்டு
மென்மையான பூவையரிடம்
மேன்மைமிகு அணிகளாகிறாய் !
கிளிஞ்சலே ,
மலிவாகக் கிடைத்தாலே
மதிப்பில்லை போலும் !
கடற்கரை மணலிலே
கணக்கற்றுக் கிடக்கும் உன்
கலையம்சம் கரையோரக்
கடைகளிலே !
இறை
எங்கும் நிறைந்த இறையே போற்றி!
தங்கும் மங்கலம் தருவாய் போற்றி!
மங்கா செல்வம் மனம்போல் தந்து
நீங்கா இன்பம் நிலை பெறச் செய்வாய்!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)