மாவீரன் நெப்போலியன் செயின்ட் ஹெலினா தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த போது அவரைக் காண வந்த நண்பர் ஒருவர் விலை உயர்ந்த சதுரங்கப் பெட்டி ஒன்றைப் பரிசளித்தார். நெப்போலியன் அதனை வைத்து தனியாகவே விளையாடி மகிழ்ந்தார்.கி.பி.1821ல் நெப்போலியன் மறைவுக்குப் பிறகு ,அது ஏலத்தில் விடப்பட்டது.பலர் கைகளுக்கு மாறியது.அதை வைத்திருந்த ஒருவர் தற்செயலாகத் திருகிய பொழுது, அது திறந்து கொண்டது.அதனுள் ஹெலீனா தீவிலிருந்து தப்பித்துச் செல்வஙதற்கு வழிகாட்டக்கூடிய வரைபடம் இருந்தது.துரதிர்ஷ்டவசமாக நெப்போலியன் திறந்து பார்க்கவில்லை.அவ்வாறு பார்த்திருந்தால் அவர் தப்பித்திருந்திருப்பார்.சரித்திரமே மாறியிருக்கும்.
முத்துமாணிக்கம்,கிருஷ்ணன்கோவிலிலிருந்து.
(பெற்றோர் ஆசிரியர்கழகச் செய்தியிலிருந்து)