சொன்னானே பாரதி அன்றே
சிந்து ந்தி சேர்க்கச் சொல்லி
துயர் தீர்க்கச் சொல்லி!
கிருஷ்ண, கிருஷ்ணா!
ஆற்று நீரிலும் அரசியல்,
கொட்டினால் கிட்டுமா? அன்பு
முக்கண்ணன் தரிசனத்தில்
முக்தியடைந்தோர் பதின்மூவர்
முரசமிட்டால் கிட்டுமா?அன்பு!
காக்கை, குருவியைத்
தனது சாதியாக்கினான்
கடலையும்,மலையையும்
கூட்டுச் சேர்த்தான்,
காஷ்மீரிலே மக்களே
காக்கையாய் ,குருவிகளாய் !
மன முரசம் முழங்கட்டும்
மகிழ்வோடு வாழ்வோம்
அகமுரசு ஆர்ப்பரிக்கட்டும்
அன்பு கெழுமி வாழ்வோம்!
இதயத்தின் லப்,டப் கூட
இனிமையோடு இசைக்கட்டும்
அன்புற்று வாழ்வோம் -நாம்
இன்புற்று வாழ்வோம்!!
No comments:
Post a Comment