Wednesday, August 11, 2010
ஆற்றல் மிகு கவிஞன்
இயற்கையான ஆற்றலென்று
இன்னமுதக் கவி இயம்பிய பின்
பேர் அரசின் பெருமை பாடும்
பேறு உண்டா எனக்கு?
உந்தன் நூல்களை வாசிக்க,வாசிக்க
எந்தன் இதய வானில்-நாளும்
வைகறை மேகங்கள் தான்!
சகோதரா,உங்கள்
மௌனப்பூ பேசிய மழலை தான்
எந்நாளும் என்னுரைக்கு முன்னுரை!
கறுப்பு நிலாவைப் பாடாமல்-வகுப்பில்
கவிக்கோ இளங்கோவின் சிலம்பைச்
செப்பியதில்லை!
கற்பொன்றில் மட்டும் கண்ணகியைப்
போலிருங்கள்,
மற்றவற்றில் அந்த மடமகளை
மறந்திடுங்கள்.
வகுப்பறையில் பிள்ளைகளைக்
கூட்டாகச் சொல்லச் சொல்லி
குதூகலித்திருக்கிறேன்!
அலைகளை தகுந்த உரைகளாக்க
தங்க கவி மகன் உனையன்றி
தரணியிலே யாருண்டு?
ஊசியை ஒற்றுமையின் சின்னமாக்கிய
உன்னதக் கவியே!உயர்ந்தாய் நாளும் நீ,
எந்தன்
மகளின் மகனைக் கையிலெடுத்து
மகிழ்வோடு சொல்லுகின்றேன்-ஆம்
பருத்து விழுந்த பரிசுச் சீட்டே!
களஞ்சியம் எங்கள் கண்மணியும்,
கவிதையைப் போலவே!
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Vairamuthu avargal paadalukkaaga National award vaangiya mudhal thiraippadam edhu endru sollungal...paarpom !!
Thavaraaga enni vida vendaam...Oru suvaarasyathirkkaaga ketten...
முதல் மரியாதை.
தம்பி!உங்களுக்கும்!!
Kandu piduchuteengalae...!
( Kettu thaana sonnenga..? )
Thank you Akkaa!
Post a Comment