வாழ்க்கை ஒரு வாய்ப்பு -அது
நேசமெனும் ரோஜாக்கள் பூக்கும் பூமி
வாழ்க்கை ஒரு வரம் -அது
பாசமெனும் தென்றல் தவழும் பூந்தோட்டம்
அதில்,
அடிமைத்தளை என்பது அரக்கத்தனம்
அல்ல்லுறுத்துவது என்பது அசுரத்தனம்
அரக்கத்தனத்தை அழித்தோம்
அந்நியராட்சி அகற்றினோம்
தென்றல் தவழும் பூந்தோட்டத்தில்
ரோஜாவின் மணம் கமழ்ந்த்து
நாசி முழுவதும் நறுமணம்
சுவாசம் முழுவதும் இனிய வாசம்
நுகர்ந்த வாசத்தை அனுபவிக்கு முன்னே
அடுக்கடுக்காய் துர் வாசனை,
சாதிச் சண்டையாய்,
சமயப் பூசலாய்,
இன வெறியாய்,
அன்பு எப்போது தழைக்கும்?
அகிலம் என்றைக்கு சிறக்கும்?
துன்பம் எப்போது கரையும்?
இன்பம் என்றைக்கு வளரும்?
தழைக்கும் ,சிறக்கும்
மலரும் ,வளரும்
நேர்மையாலே ,மன ஓர்மையாலே,
அன்பாலே,நல்ல பண்பாலே.
அன்பு மலர்த்தி
ஆற்றல் பெருக்கி
இன்பம் நிறைத்து
ஈகையோடிருந்தால்
யாவும் கைகூடும்
ஆன்மீக பூமி என
அகிலம் முழுவதிலும்
அறியப்படும் நம்
அன்னை பூமி
வல்லரசாக வேண்டாமா?
வேண்டும் !முதலில்
நல்லரசாக மலரட்டும்
'வல்லரசு' தானே உருவாகும்.
No comments:
Post a Comment