Tuesday, November 2, 2010
வரம்
சின்னக் கை
சிங்காரக் கை
தத்தித் தத்தி வந்து தளிர்நடை
போட்டு வந்து எம் கரம்
பற்றினாய்!
இறைவன் வாழ்வில் தந்த
வரம்!
பிஞ்சுக் கைகளை நம்
பஞ்சு விரல் பற்றி
அழைத்துச் செல்வோம்
அழகான வாழ்வுக்குள்
அமைத்துத் தருவோம்
அன்பு ததும்பும் வாழ்வினை!
அற்புத உலகில் அமைக்கட்டும்
அன்பு சாம்ராஜ்யம்!
இறைவன் நமக்களித்த
வரத்திற்கு
வரமாய் மாறும் தவம் புரிவோம்!
ஈன்ற பொழுதினும்
பெரிதுவக்கட்டும்,
இவன் தாய்!
இவன் தந்தை எந் நோற்றான்?
இயம்பட்டும் இனிமையாய்
இவ்வுலகு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment