உம்மையறிந்தவர் உரையாதிருப்பாரோ
மாந்தரே -உயர்
தன்மையோடு புரியும் நற்செயல்
புகழாதிருப்பாரோ-மாந்தரே
எத்தனை ஆயிரம் திட்டங்கள் தீட்டினும்
மாந்தரே -அத்தனை
திட்டமும் சட்டமெனச் செல்லுமா
மாந்தரே
ஆழியிலுள்ள சிப்பியின் முத்தாய்
மாந்தரே -அனைத்துமே
ஆகுவதுண்டோ மாந்தரே
பாழாய்ப்போன சிப்பியையும் தான்
மாந்தரே -பக்குவமாய்
கலைப்பொருள் செய்வாரே மாந்தரே
ஆங்கிலப் பயிற்சி அவசியமென்றாலும்
மாந்தரே -ஆற்றல்
அத்துணை பேருக்கும் ஒன்றாயிருக்குமோ
மாந்தரே
எல்லோரையுமேற்றும் எண்ணமென்றுமுண்டு
மாந்தரே -என்றாலும்
கரமொன்றின் விரல்களைந்தும்
ஒன்றாயிருத்தல் கூடுமோ?
உந்தன் முயற்சி உயர்ந்த முயற்சியே
மாந்தரே -விதை ஒன்று பழுதானால்
உழவனை நிந்தித்தல் நியாயமோ?
பட்டபாட்டிற்கான பலன் வேண்டாம்
என்பரோ மாந்தரே -பதர் ஒன்று
இருந்தால் பயிர் எல்லாம் பதர் எனல்
நியாயமோ?
No comments:
Post a Comment