அன்பெனும் ஆற்றல்
அகிலத்தையே ஆளும்
அருள் நிறை சக்தி
அழகிய குடுத்பத்தின்
அஸ்திவாரமாய் அமைவது
அருமையான அகத்தின்
ஆத்மார்மாத்தச் சொல்
அக வெள்ளத்தினிலே
அழிவினைத் தடுக்கும்
அணைக் கட்டு
மன மாளிகையினை
வனமாகாது காக்கும்
தனம் தரு சக்தி
நெஞ்சம் என்கிற
நினைவகத்திலே
வஞ்சத்தை வீழ்த்தி
வளம் சேர்ப்பது
உள உணர்வுதனை
உன்னதமாக்குவது
No comments:
Post a Comment