மலர்ந்த மனம்
உலர்ந்த உள்ளம்
உவகை கொள்ளாது
உலகையே கொல்லும்
தளர்ந்த நெஞ்சம்
தாழ்வுற்றே வாடி,
தகாததைச் செய்யும்
மலர்ந்த மனமே
மகிழ்வால் என்றும்
மகத்துவமே செய்யும்
உயர்ந்த உள்ளம்
உவப்பாலே என்றும்
உலகையே வெல்லும்
அன்பான அகங்கள்
அல்லதை விடுத்து
நல்லதையே செய்யும்
கனிவான உள்ளம்
காலம் கடந்து
காசினியை வெல்லும்!
4 comments:
ம்... சூப்பர்..
செம வரிகள் !!! இக்கவிதையை புக்மார்க் செய்துக் கொண்டேன். வாழ்த்துக்கள் சகோ.
நன்றி சௌந்தர்.
அன்பான உள்ளங்கள் அழகிய கருத்தை அகக்குறிப்பில் சேர்க்கும்.சேர்த்ததற்கு நன்றி தம்பி.
Post a Comment