ஆசிரியத் தொழில் -ஆஹா
எத்துணை அழகானது?
தொழிலா இது ?- இல்லை
தவம் ,தியானம் ,யோகம்
ஆசிரியரைப் பார்க்கையில்
அகம் மகிழ்கிறதென்றால்
ஆசிரியராய் இருக்கையிலும்
அகம் குளிர்கின்றது.
ஏறி வந்த ஏணியினை
எண்ணிப் பார்ப்பதொரு சுகமெனில்,
ஏணியாய் நிற்பது கூட
எந்நாளும் சுகமே!
6 comments:
உண்மை....
அந்த அனுபவம் எனக்கும் தெரியும்...
அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஆசிரியர்க்கு நன்றி!
ஏறி வந்த ஏணியினை
எண்ணிப் பார்ப்பதொரு சுகமெனில்,
ஏணியாய் நிற்பது கூட
எந்நாளும் சுகமே!
..... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
நன்றி சித்ரா!
அருமை அருமை
பெறுபவனைவிட கொடுப்பவனுக்கு உள்ள சுகம்
கொடையாளிக்கு மட்டும்தான் புரியும்
மிகச் சிறந்த பதிவு
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணி சார்!
எங்கள் பணி கொடுத்த கொடை இது!
Post a Comment