அன்பு,
அந்த அற்புத ஆற்றலின்
அழகிய பரிமாணமே,அன்னையே!
இரக்கமே,
இனிய அன்னையின் இதயப்பிறப்பே,
ஆதர்ச அன்னையின் அருட்சுரப்பே,
கருணையே,
காக்கும் அன்னையின் கண்ணிலே
கனிவெனக் கரைந்து மறைந்தாயோ?
பரிவே,
பாரில் எங்கோ உதித்திட்டு
பாரதம் சேர்ந்திட்டது புண்ணியமே!
தவமும்,யோகமும் நீர் தனியாய்ச் செய்திடவில்லை-உமது
கர்ம யோகத்தினாலே
காளி நகரமே கண்ணியமானதே!
தாய்மையிலே இறைமையாம்
தாய்மையிலே இறைமையாம்
இறைமையே தாயாக வந்திங்கு
தன்னிகரற்று விளங்கியது.
ஆன்மீகவாதிகளின் ஆயிரமாயிரம்
அறிவுரைகள் எல்லாம்-உந்தன்
அறப்பணியின் முன்னாலே சற்று
மாற்றுக் குறைவு தான்.
நோபல் பரிசால் உமக்குப் பெருமையா?
நிச்சயம் இல்லை
நிச்சயம் இல்லை
உம்மால் தான் அப்பரிசே உயர்ந்தது
3 comments:
பாரில் எங்கோ உதித்திட்டு
பாரதம் சேர்ந்திட்டது புண்ணியமே!
...அழகான கவிதை - அருமையான சமர்ப்பணம்.
மிகச் சரி
பலருக்கு பரிசும் பதவியுமே பெருமை சேர்க்கின்றன
வெகுசிலரால்தான் பதவியும் பரிசுகளும் பெருமிதம் கொள்கின்றன
அன்னை என்றாலே அன்பு கருணைஇரக்கம் பரிவுதான்
அதனை மிகச் சரியாக தலைப்பாக்கியமைக்கு வாழ்த்துக்கள்
நல்ல தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வேர்ட் வெரிஃபிகேஷனை நீக்கினால்
பின்னூட்டமிட கொஞ்சம் ஏதுவாக இருக்கும்
என நினைக்கிறேன்
Post a Comment