Wednesday, August 3, 2011

மனிதத் தேவை

சுவரை   நிமிர்த்திட  -இவள்
வளைகிறாள்-வாழ்வை
வளைக்கின்றாள்!

உறைவிடம்   உருவாக்கி
உணவு ,உடை    உண்டாக்குவாளா?
உயிர்  உருக்கி ,உழைப்பு   பெருக்கி
உயர்வு   பெறாவிடினும்
உலகின்  மாறாத  மனிதத்  தேவை
உணவு ,உடை ,உறைவிடம்
பெறுவாளா?

9 comments:

Yaathoramani.blogspot.com said...

வாழ்வின் அவசியத் தேவை மூன்று என
மூன்றையும் அடைந்தவர்கள்தான்
சொல்லிக் கொண்டிருக்கிறோம்
முதல் தேவை கிடைத்தாலே போது என
நாளும் சாகிற ஏழையரே இங்கு
மிக மிக அதிகம்
சிந்தனையை தூண்டிச் செல்லும் தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
(தற்சமயம் வலைச்சர ஆசிரியராகப்
பொறுப்பேற்று பதிவுகள் இட்டு வருகிறேன்
தங்களும் தங்கள் கருத்தை பதிவு செய்யலாமே)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இது பலபேருக்கான கேள்விக்குறிகள்...

இன்னும் கொஞ்சம் கவிதை அழகு செய்யுங்கள்..

Murugeswari Rajavel said...

நன்றி ரமணி சார்.கண்டிப்பாக பதிவு செய்கிறேன்.

Murugeswari Rajavel said...

முயற்சிக்கிறேன் சௌந்தர்.கருத்துக்கு நன்றி.

Murugeswari Rajavel said...

உங்கள் கருத்து முற்றிலும் சரியானது.தேவைகள் என்றவுடன் வழக்கமான பட்டியலை வரிசையாக்கிட்டேன் ரமணி சார்.

வெட்டிப்பேச்சு said...

நீங்கள் குறிப்பிடுவது வேறு யாரையோ என நினைக்கிறேன். அது நானல்ல.

ஆயினும் பதிவுலகில் உள்ளோர் பெரும் தொண்டுள்ளத்துடன் இருப்பதை அறிவேன். இது போற்றுதலுக்குரியதுதான்.

நான் பதிவுலகில் பழக்கமானவன் அல்ல.
புதியவன்.

எனது வலைத்தளத்திற்கு தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வரவுக்கும் வாழ்த்துரைக்கும்
மிக்க நன்றி

Murugeswari Rajavel said...

வெட்டிப் பேச்சு\\
சித்ராவின் வலைப்பூ பெயரை உங்கள் பெயராக வைத்திருக்கிறீர்களா,குழம்பி விட்டேன்.

Chitra said...

உயிர் உருக்கி ,உழைப்பு பெருக்கி
உயர்வு பெறாவிடினும்
உலகின் மாறாத மனிதத் தேவை
உணவு ,உடை ,உறைவிடம்
பெறுவாளா?


.... கேள்விக்கு பதில் தர முடியாத சமூதாய சூழல்.... ம்ம்ம்ம்.....