Tuesday, September 20, 2011
வேலைக் கோட்பாடு
மார்க்ஸின் மூன்றாவது கருத்து இது.இதனைப் புரிந்து கொள்வதன் மூலம் சுவாமி விவேகானந்தரின் வேலைக்கோட்பாட்டின் பல ஆழமான பரிமாணங்களை அறிந்து கொள்ளலாம்.
வேலை என்பது சம்பாதிப்பதற்கான ஒரு வழி, புற வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான ஒரு வழி என்ற கண்ணோட்டத்திலேயே பல சிந்தனையாளர்கள் பார்க்கின்றனர்.ஆனால் மார்க்ஸ் அதன் மன இயல் பரிமாணத்தில் கவனம் வைத்தார்.வேலை என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்,மனிதனின் அக வெளிப்பாடு அது என்று கண்டார் அவர்.வேலையின் வாயிலாக அகத்திலுள்ள படைப்பாற்றல் வெளிப்பட,வெளிப்பட அந்த வேலையே மனிதனில் அக மாற்றங்களை ஏற்படுத்துகிறது.வேலையின் மூலம் அகத்திலுள்ள தெய்வீகம் வெளிப்படுவது பற்றி விவேகானந்தரும் பேசுகிறார்.எனவே இந்த விஷயத்தில் மார்க்ஸீம்,விவேகானந்தரும் ஒத்த கருத்து உடையவர்களாக இருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அருமையான கருத்து
ஆசிரியர் பணி மருத்துவர் பணி
முதலான சேவை பணிகள்
அதிகாரம் மற்றும் லாப நோக்கம் மட்டுமே
கொண்ட பணிகளை ஒப்பிட்டு
உங்கள் கருத்துக்கு வலிமை சேர்க்கும்படி
விரிவான கட்டுரையாகவே எழுதியிருக்கலாமோ?
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்ல பதிவு. பணி செய்தல் அகவெளிப்பாடு என்பது ஒரு அருமையான கருத்து.
நன்றி ரமணி சார்.
தங்களின் கருத்துக்கு நன்றி ஐயா.
வேலையின் வாயிலாக அகத்திலுள்ள படைப்பாற்றல் வெளிப்பட,வெளிப்பட அந்த வேலையே மனிதனில் அக மாற்றங்களை ஏற்படுத்துகிறது./
மிக அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
பாராட்டுக்கு நன்றி.
இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்.
வேலை என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்,மனிதனின் அக வெளிப்பாடு அது என்று கண்டார் அவர்.வேலையின் வாயிலாக அகத்திலுள்ள படைப்பாற்றல் வெளிப்பட,வெளிப்பட அந்த வேலையே மனிதனில் அக மாற்றங்களை ஏற்படுத்துகிறது>>>>> வேலை என்பது தனிநபர் நோக்கிலும், பொது நல நோக்கிலும் செய்யப்படுகின்றது. தனி நபர் நோக்கி்ல் செய்யப்படும் வேலை தனிநபரில் மாற்றங்களை விளைவிக்க கூடியது, பொது நல நோக்கில் செய்யப்படும் வேலை சமூகத்தில் மாற்றங்களை விளைவிக்க கூடியது.. நல்ல கருத்தை பதி்வாக்கியமைக்கு தலை வணங்குகிறேன்...
Post a Comment