விவேகானந்தரின் பொருளாதாரச் சிந்தனைகள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவை.
அமர்த்ய செனின் மனிதநலப் பொருளாதாரம்(welfare economics)
தங்கள் தலையெழுத்தை மாற்றிக் கொள்வதில் ஏழைகளுக்குச் சிறிதும் சுதந்திரமே இல்லை என்பதை அவர்களுடன் நாம் பழகும்போது தான் புரிந்து கொள்ள முடியும்.
'திறமைகளை வெளிப்படுத்த முடியாத நிலை தான் வறுமை'என்று கூறுகிறார் அமர்த்ய சென்.மக்களை மென்மேலும் திறமைகளை வெளிப்படுத்துமாறு செய்வது தான் வறுமையைப் போக்குவதற்கான சிறந்த வழி.
திறமைகளை வெளிப்படுத்த முடியாததால் தான் வறுமை தொடர்கிறது.இந்தியாவின் ஏழைகள் இந்தச் சுழியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
செய்யும் தொழிலே தெய்வம்-கொண்ட
திறமை தான் நமது செல்வம்.
5 comments:
அருமையான பதிவு
ஆயினும் கோடை மழை போல்
சட்டெனப் பெய்து நின்று விடுதல் போல்
உடன் துவங்கியதும் முடித்ததுபோல் இருந்தது
கொஞ்சம் விரிவாக எழுதி இருந்தால்
அமர்தியாசென் குறித்து அறியாதவர்கள்
அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்.அவரது பொருளாதாரச் சிந்தனை குறித்து படித்த செய்தியை இங்கு பதிவு செய்தேன்.அமர்தியா சென் குறித்து விரிவாய் அறிந்து கொண்ட பின்னர் பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.
'திறமைகளை வெளிப்படுத்த முடியாத நிலை தான் வறுமை' மில்லியன் டாலர் பெருமானமுள்ள வரி. நிறைய எழுதுங்கள். நாங்கள் அறிந்து கொள்ள.. வாழ்த்துக்கள்...
நன்றி தமிழன்.
அனேக குறைபாடுகளை கொண்ட நமது சமுதாய அமைப்பும் இதற்கு ஒரு காரணம்...
அரசியல்வாதிகள், பேராசை பிடித்த முதலாளிகள் இவர்களே முக்கிய காரண கர்த்தாக்கள்...
Post a Comment