Wednesday, January 18, 2012

சுய பார்வை

படித்ததில் பிடித்தது.

வா ,சகோதரி
இந்த
வார்த்தை வளையங்களை
விட்டு
வெளியே வருவோம் !

அதிகம் பேசுபவள் பெண்
என்று
அதிகம் பேசுபவரை
ஆச்சர்யப்படுத்துவோம் !

மென்மை என்ற
போர்வையை உதறி
மேன்மை என்னும்
உயரம் தீண்டுவோம் !

உதட்டுச் சாயம்
உயரச் செருப்பு
என்ற
அடையாளம் அழிப்போம்

நம் முதுகுக்குப் பின்னால்
வீசப் படுபவை
கத்திகள் அல்ல, வெறும்
காகித அம்புகளே!

கண்ணீரல்ல நம் ஆயுதம்
பெண்மையின் கம்பீரம்

நம்மிடம் இருக்கட்டும்
தாய்மையின் கனிவும்
தளராத உழைப்பும் !

எல்லோரிடமும் நட்பாயிருப்போம்
எல்லைகள் தாண்டினால்
எவரையும் மறுப்போம் !

நாம் குளிக்க அல்ல நெருப்பு
நம் விழிகளில் இருக்கட்டும்
அதன் இருப்பு !

2 comments:

ராஜி said...

நாம் குளிக்க அல்ல நெருப்பு
நம் விழிகளில் இருக்கட்டும்
அதன் இருப்பு !
>>
பெண்களுக்கு இருக்க வெஏண்டிய குணம் பற்றி அருமையான வரிகளில் சொல்லியிருக்கீங்க. நன்றி

Yaathoramani.blogspot.com said...

எல்லோரிடமும் நட்பாயிருப்போம்
எல்லைகள் தாண்டினால்
எவரையும் மறுப்போம் !

நாம் குளிக்க அல்ல நெருப்பு
நம் விழிகளில் இருக்கட்டும்
அதன் இருப்பு !

அருமையான படைப்பு
தொடர்ந்து தர வேணுமாய்
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்