- தேநீர் பருகும் கணங்கள்
- சில நிமிடத் திருவிழாக்கள்
- தேநீர்க் கோப்பை
- ஒரு
- கையடக்க சந்நிதானம்
- கூப்பிட்ட போது
- வரம் தந்தோடிப் போகும்
- மலிவு தெய்வம் தேநீர்
- உதடுகளில் சூடு கொளுத்தி
- கதகதப்பாய் நாவுதடவி
- சுவையரும்புகள் ஒவ்வொன்றாய்த்
- தொட்டெழுப்பி
- இனிப்பு கடந்தொரு துவர்ப்பு பரப்பி
- தொண்டையில் நழுவும்போதே
- ரத்தக் குழாய்கள் புடைக்க மலர்த்தி
- குடலில் விழுந்த மறுகணம்
- மூளையின் திரிகளில் அது
- சுடர் கொளுத்தும் போது
- மோட்சத்தின் பக்கத்து வீதிவரை
- சென்று திரும்பும் ஜீவாத்மா.
- குவளைத் தேநீரில்
- ஐம்பூதம் அடக்கம்
- தேயிலைச் செடியின் வேர்வழி புகுந்து
- பச்சிலை எங்கும் பரவிய மண்
- தேயிலையின் சாரம் வாங்கித்
- தன்னிறமிழந்து செந்நிறமான நீர்
- தேநீர் சுடவைக்கத்
- தித்திக்கப் பரவிந தீ
- பிஞ்சுத்தேயிலை மணத்தைப்
- பிரசாரம் செய்யும் ஒரு துண்டுக்காற்று
- இலை
- தலை குளித்த மழை வழியே
- துளித் துளியாய் ஆகாயம்
- ஐம்பூதங்களையும் இப்படி
- உள்வாங்கி நுரைக்கும்
- ஒரு கோப்பை
- வைரமுத்து அவர்களின் கொஞ்சம் தேநீரிலும் கொஞ்சம்
Saturday, August 18, 2012
ஆளுக்கொரு கோப்பை
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஐம்பூதங்களையும் இப்படி
உள்வாங்கி நுரைக்கும்
ஒரு கோப்பை
வைரவரிகள்!!
அருமையான தே நீர்க் கவிதையை பதிவாக்கிக் கொடுத்து
உள்ளத்தில் சூடேற்றியமைக்கு மனமாரந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
அருமை வரிகள்... நன்றி சகோதரி...
வாழ்த்துக்கள்...
வைர வரிகள் வைரமுத்துவின் வரிகள்!
பதிவாக்கியதற்கு கருத்திட்டவர்களுக்கு நன்றி.
Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
வைரவரிகளுடன் கவிதை சூப்பர்!
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
Respected Madam,
I am very Happy to share an award with you in the following Link:
http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html
This is just for your information, please.
If time permits you may please visit and offer your comments.
Yours,
VGK
Post a Comment