Tuesday, September 18, 2012

அந்த நீல(ள)க் கடற்கரையில்!



               
                                பரந்து  விரிந்த  பரப்பிலே
                                பற்பல   காட்சிகள் ,


 
                              ஆதிக்கு  சமமாகித் துயிலும்
                              ஆன்றோர்கள்  ஒரு  பக்கம்,
                              ஆழிக்கே  வெளிச்சம்  காட்டும்
                              ஆகாயம் தொட எத்தனிக்கும்
                               கலங்கரை விளக்கு மறு பக்கம்!


                         
                              அலைகளிலே  ஆர்ப்பரித்து 
                              விளையாடும்                                   
                              அன்பர்   கூட்டம்  ஒரு  பக்கம்

                                அலை கடலின் மேல் அழகாய்
                                 மிதக்கும்                  
                                அருமை  நகரம்  மறு பக்கம்!

                               அலைகடலுக்கருகிலேயே
                               அங்காடித் தெரு ஒரு பக்கம்
                             
                             அங்கே வலையில் விழுந்ததை
                              வகையாய்

                              ஆக்கித் தருகுது  மறு பக்கம்!

                                பழக் கடைகள்  ஒரு  பக்கம்
                                பஜ்ஜியும்,பக்கோடாவும் 
                                மறுபக்கம்!

பந்தயக்குதிரை போல் பழக்கிய
குதிரை ஒரு பக்கம்
பலூனைக் குறி வைத்துப்
பயிற்சி செய்வோர் மறு பக்கம்!
  பட்டாணி சுண்டல் பாரம்பரியம்
  கடற்கரை தோன்றிய போதே தோன்றியதோ?



  பல(ழ)  கலவைக் காட்சிகள்
  பாரம்பரியக் கடற்கரையில்!             

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களும் அதற்கேற்ற வரிகளும் அருமை...

சென்னை சென்று இருந்தீர்களோ...?

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான படங்கள் +
அருமையான விளக்கங்கள்.

பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

vgk

Murugeswari Rajavel said...

VGK அவர்களுக்கும்,DD அவர்களுக்கும் நன்றி.

Yaathoramani.blogspot.com said...

படங்களும்
அதற்கான கவித்துவமான விளக்கங்களும்
மிக மிக அருமை.தொடர வாழ்த்துக்கள்
(புகைப்படங்க்கள் மிக மிக அருமை
நீங்க்கள் எடுத்ததாய் இருக்கும் என நினைக்கிறேன் )

Murugeswari Rajavel said...

நன்றி ரமணி சார்.நாங்கள் எடுத்த புகைப்படங்களில் ஒன்றிரண்டு முகநூலில் பதிவு செய்தேன்.இவை Google உபயம்தான்.