இனியொரு விதி செய்வோம்
அதை எந்நாளும் காப்போம் என்று
பாரதி பகர்ந்து பன்னெடுங்காலமாயிற்று
காத்தோமா?அல்லது
நாமேனும் ஓர் விதி செய்வோமா?
செய்த பின்பு அது காக்க-இன்னும்
நெடுங்காலம் ஆகிப்போகுமா?
அதனால்,
கனவு காணச் சொன்ன -நம்
கனவான் கலாம் வழியில்-நாம்
கற்பனைச் சிறகும் சேர்த்துக் கட்டிக்
கொள்வோம்
சண்டையில்லாத பிரபஞ்சம்
சந்தோஷமே நிறைந்த பிரபஞ்சம்
அணுகுண்டு ஒலியில்லா அகிலம்
அமைதிப் புறா பறக்கும் அகிலம்
உலுத்தர்கள் இல்லாத உலகு
உன்மத்தர்கள் நிறைந்த உலகு
கவலைகள் கரைந்து போன காசினி
களிப்பே நிறைந்திருக்கும் காசினி
கண்டங்களாய் நாம் பிரித்து வைத்தன
துண்டங்களாய் மாறி விடாது,
அன்பு நிறைந்த அகண்டமாய்
ஆகி விடாதோ?
6 comments:
Nallla karuthu...Nalla kavithai...
Poruthamaana vaarthagalai serthu nandraaga eluthi irukkireergal...
Thank u Linges
nalla kavithai ammaa. vaalgavalamudan.
Thank u sir.
ARUMAIYANA KAVITHAI. AZHAHANA PADAM(PICTURE). THODARATTUM UMADHU KAVITHAI.
Post a Comment