உன் மதிப்பு என்றும்
உயர் மதிப்பே!
வறுமைப் பிடியினில்
வருணிக்க வார்த்தையாய்,
வசதி படைத்தோரிடம்
வடிவங்கள் பலவாக!!
அரச போகத்தினருக்கு
அலங்காரப் பொருளாய்
அம்மனின் திருக்கழுத்தில்
அழகுமிகு அணிகலனாய்
அல்லலுறும் வேளையிலே
அடகுக்கடை சென்றுவரும்
ஆபத்பாந்தவனாய்!
பத்தரைமாற்றுக் கட்டியாய்
பதுக்கல்காரரின் பிடியிலே!
கண்களைக் கூசவைக்கும்
காசுக்காரரன் கழுத்துக்கள்,
எது,எப்படியோ?
அன்றும்,இன்றும்,என்றும்
உன் மதிப்பு,உயர் மதிப்பே!
பெட்டகத்திலுக்,பேழையிலும்
பதுங்கியிருக்கும் போதல்ல
பயனுறு தேவைக்கு-நீ
பயன்படும் போது.
உயர் மதிப்பே!
வறுமைப் பிடியினில்
வருணிக்க வார்த்தையாய்,
வசதி படைத்தோரிடம்
வடிவங்கள் பலவாக!!
அரச போகத்தினருக்கு
அலங்காரப் பொருளாய்
அம்மனின் திருக்கழுத்தில்
அழகுமிகு அணிகலனாய்
அல்லலுறும் வேளையிலே
அடகுக்கடை சென்றுவரும்
ஆபத்பாந்தவனாய்!
பத்தரைமாற்றுக் கட்டியாய்
பதுக்கல்காரரின் பிடியிலே!
கண்களைக் கூசவைக்கும்
காசுக்காரரன் கழுத்துக்கள்,
எது,எப்படியோ?
அன்றும்,இன்றும்,என்றும்
உன் மதிப்பு,உயர் மதிப்பே!
பெட்டகத்திலுக்,பேழையிலும்
பதுங்கியிருக்கும் போதல்ல
பயனுறு தேவைக்கு-நீ
பயன்படும் போது.
2 comments:
உங்கள் கவிதைகளை படிக்கும்போது நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கை அனுபவம் உள்ளவர் என்பதும், சமூகத்தை கூர்ந்து கவனிப்பவர் என்பவர் என்பதும் தெரிகிறது. கவிதைகளுக்கு இடையிடையே உங்கள் கருத்துக்களை சிறிய கட்டுரைகளாகவும் வடிக்கலாமே....அக்கா. உங்களைப்போன்ற சிந்தனையாளர்களின் எண்ணங்கள் எப்போதுமே சமுதாயத்திற்கு தேவை.
நன்றி லிங்கேஸ்!உங்கள் வார்த்தைகள் எண்ணங்களுக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது.
Post a Comment