2007 குடியரசு தினத்தன்று பள்ளியில் கொடியேற்றத்தின்போது வாசித்தது.
காட்சிகள் மாறலாம். காலம்?
எமக்குத் தொழில் கவிதை
என்றான் ஏற்றமிகு கவிபாரதி,
எம் தொழிலும்....
பாட்டுத் திறத்தாலே வையத்தையே
பாலித்திட எண்ணிட்டான் பாரதி,
எந்தன் வரிகள்
செவி மடுக்கும் உங்களின்
சிந்தை நிரப்பட்டும்.
மாநிலம் பயனுற வாழும் வல்லமை
கேட்டான் மகாகவி-எம்
மாணவியரின் மனது தொடும்
மணி மந்திரச் சொற்கள் வேண்டி
பைந்தமிழன்னையின் பாதகமலத்தில்
பாமலர் சூட்டுகின்றேன்.
குடியாட்சியிலே,
குதூகலம் கொஞ்சுகிறதா?
குழப்பமே மிஞ்சுகிறதா?
பட்டிமண்டபத் தலைப்பு போல்
உள்ளதா?ஆம்,
நாணயத்தின் இருபக்கத்தைப் போல
குடியாட்சியிலே,
குதூகலமான வாழ்வொரு பக்கம் எனில்
குற்றங்களும் மலிந்திருப்பது
கண்கூடு தானே?
வான்வெளிச் சோதனை பல
வானளாவிய சாதனையாய்!
வீழ்ச்சிப் பாதையில் சென்ற
இரயில்வே துறை கூட
வெற்றிப் பாதை நோக்கி,
இணைந்தது இந்தியா ஒரே ரூபாயில்!
இலவசங்கள் பலப்பல,
கட்சியின் காட்சியாய்!
வளர்ச்சியின் வேகமென்னவோ
வாயு வேகம் தான்!
வீழ்ச்சியும் பாரதத்தைப்
படுகுழியில் தள்ளுகிறதே,
சட்டங்கள் பலவற்றால்-மனிதன்
சங்கடத்தில்,சாக்காட்டிலும்!
குழந்தைகள் குவியல்களாய்,
குவித்திட்ட அரக்கன் கோலாகலமாய்,
அசம்பாவிதங்கள் அன்றாட
சம்பவங்களாய்,
அன்றாட சம்பவங்கள் அல்லல்
நிறைந்ததாய்!
தீர்வு?
ஒன்றே,ஒன்று தான்!
தனிமனித ஒழுங்கு.
கணிப்பொறிச் சாதனைகளாலே
எம் நாட்டுக் கண்மணிகள்
கனவான்களாய்,தனவான்களாய்
இருத்தல் போதாது,
கண்ணியவானாய் இருந்திடல்
வேண்டும்
காத்திடல் வேண்டும்,வளரும்
இந்தியாவை
வல்லரசான இந்தியாவாய்!!
காட்சிகள் மாறலாம். காலம்?
எமக்குத் தொழில் கவிதை
என்றான் ஏற்றமிகு கவிபாரதி,
எம் தொழிலும்....
பாட்டுத் திறத்தாலே வையத்தையே
பாலித்திட எண்ணிட்டான் பாரதி,
எந்தன் வரிகள்
செவி மடுக்கும் உங்களின்
சிந்தை நிரப்பட்டும்.
மாநிலம் பயனுற வாழும் வல்லமை
கேட்டான் மகாகவி-எம்
மாணவியரின் மனது தொடும்
மணி மந்திரச் சொற்கள் வேண்டி
பைந்தமிழன்னையின் பாதகமலத்தில்
பாமலர் சூட்டுகின்றேன்.
குடியாட்சியிலே,
குதூகலம் கொஞ்சுகிறதா?
குழப்பமே மிஞ்சுகிறதா?
பட்டிமண்டபத் தலைப்பு போல்
உள்ளதா?ஆம்,
நாணயத்தின் இருபக்கத்தைப் போல
குடியாட்சியிலே,
குதூகலமான வாழ்வொரு பக்கம் எனில்
குற்றங்களும் மலிந்திருப்பது
கண்கூடு தானே?
வான்வெளிச் சோதனை பல
வானளாவிய சாதனையாய்!
வீழ்ச்சிப் பாதையில் சென்ற
இரயில்வே துறை கூட
வெற்றிப் பாதை நோக்கி,
இணைந்தது இந்தியா ஒரே ரூபாயில்!
இலவசங்கள் பலப்பல,
கட்சியின் காட்சியாய்!
வளர்ச்சியின் வேகமென்னவோ
வாயு வேகம் தான்!
வீழ்ச்சியும் பாரதத்தைப்
படுகுழியில் தள்ளுகிறதே,
சட்டங்கள் பலவற்றால்-மனிதன்
சங்கடத்தில்,சாக்காட்டிலும்!
குழந்தைகள் குவியல்களாய்,
குவித்திட்ட அரக்கன் கோலாகலமாய்,
அசம்பாவிதங்கள் அன்றாட
சம்பவங்களாய்,
அன்றாட சம்பவங்கள் அல்லல்
நிறைந்ததாய்!
தீர்வு?
ஒன்றே,ஒன்று தான்!
தனிமனித ஒழுங்கு.
கணிப்பொறிச் சாதனைகளாலே
எம் நாட்டுக் கண்மணிகள்
கனவான்களாய்,தனவான்களாய்
இருத்தல் போதாது,
கண்ணியவானாய் இருந்திடல்
வேண்டும்
காத்திடல் வேண்டும்,வளரும்
இந்தியாவை
வல்லரசான இந்தியாவாய்!!
1 comment:
மிகச்சரி அக்கா....இது ஜனநாயகம் என்பதே சந்தேகம்தான். நடப்பதை எல்லாம் பார்த்தால் ரத்தக் கொதிப்பே வந்துவிடும் போல
இருக்கிறது எனக்கு..
Post a Comment