அறிவு பூர்வமாக கவி பல
ஆக்கிட ஆசையுண்டு
இலக்கிய நயமொடு கவிபல
இயற்றிட இச்சையுண்டு
சொல்வளத்துடனே கவிபல
சொல்லிடும் எண்ணமுண்டு
செம்மையுறு கவிதை சொல
சொல் வளமுமில்லை
இனிமையுறு கவிதை இயம்ப
இலக்கண அறிவுமில்லை
அறிவுறு கவிதை ஆக்கும்
ஆற்றலும் எமக்கில்லை
அனுபவம் மட்டிலுமே
கவிதை சொல்லிடும்
ஆவலைத் தூண்டிடுதே!
தங்கக் கவிப்பாதையின்
தடம் செல்லாவிடினும்
தரிசனம் மட்டும் போதும்!!
4 comments:
அருமை தொடருங்கள்..
அருமை!
நன்றி சௌந்தர்!
நன்றி ரவி!
Post a Comment