அம்மாவை வணங்கி ஆசி பெற்றோம்-நம்
அன்புத் தோழி குறித்த அமுதமொழி
சொல்லுவோம்
அவரின் மனம் தனை வெல்லுவோம்
ஆம்,இவர்கள் நம்
அன்பான தோழி,அருமையான தோழி
இன்பம் தரு தோழி,ஈகை நிறைந்த தோழி
உயர்வான தோழி,ஊக்கம் தரு தோழி
பிருந்தாவனமெனும் நந்தவனத்திலே
திளைத்த நட்புமனம் இவருடையது
விக்டோரியா மகாராணியாய் தஞ்சம்
தந்த தங்க மனம் கொண்ட நட்புமுண்டு
அமிர்தமென சுவை தரும் அழ்ந்த
நட்பும் இவருக்குண்டு
சிலர் பேசினாலே
அகம் தளரும்,இவருடன் பேசினாலோ
அகம் மலரும்-நம் அகம் மலர்த்தும்
அரிய பணியை அழகாய்ச் செய்தார்
இன்பமாய் இருந்திடல் வேண்டும்
இனிமையோடு பழகிடல் வேண்டும்
வள்ளுவரின் வாய்மொழியான
''கனியிருப்பக் காய் கவர்ந்தற்று''இது
உந்தன் அமுதமொழியல்லவா?
உங்கள் மொழிகள் எங்கள் பலரின்
மனப் புண்ணுக்கு மருந்து
தங்களின் ஞானமொழி சிலரின்
அகக் கண்ணுக்கு மருந்து
இனிமை விரும்பும் இவரின் மனம்
என்றும் இளமைதான்
மனதாலே என்றும்
மார்க்கண்டேயராக இருக்கும்
உங்களுக்குக் காலம்
கொடுக்கிறது கட்டாய ஓய்வு
ஞானத்தால் நற்குடும்பம் அமைத்தீர்
பொறுமையினால் உயர் பரிசு பெற்றீர்
உங்கள் ஓய்வுக்காலம் சிறப்புற
வாழ்வு வளமுற,யாவும் நலமுற
எங்கள் பரம தகப்பனே அவர்களுக்கு
அருள் தாரும்!
2 comments:
நன்றி அக்கா...
அழகுக்குட்டியின் பெயர்...ரதி பாரதி.....அவளும் அன்னையின் தீவிர பக்தைதான்.
கழுத்தில் எப்போதும் ஒரு அன்னை டாலர் இருக்கும்..
Post a Comment