Monday, August 15, 2011
சுதந்திரம்
தண்ணீர் விட்டா வளர்த்தோம் ?சர்வேசா
இப் பயிரைக் கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ?
கதறினாயே பாரதியே
பலனில்லை இன்றும்
கருகும் உயிர்கள்
கறுப்புப் பண ஊழல்கள்
எங்கே போனது சுதந்திரம்?
எந்திரமாய் இயங்கும் உலகில்
தந்திரமாய்க் காரியம் செய்யினும்
மந்திரத்தால் மாங்காய் விழுமா?
சுதந்திரம் தான் சுகமே தரினும்
சூட்சுமமான சுமுகம் தருமா?
சுதந்திரத்திற்கான சூட்சுமம் காண
இயந்திர மனம் நிறுத்தி,
இதயத்தில் ஒளி ஏற்று-அந்த
ஒளியை வாழ்வின் வழியாய் தந்து
உயர் பண்பு,ஒழுக்கம் தந்து
மனித வாழ்வின்
துயர் துடைக்கும் மாண்புடைய பாரதம்
ஆன்ம ஒளி தனை ஏற்றி
மானுட வாழ்வின்
பான்மை உயர்த்திடும் பாரதம்
கலைகள் ,கல்வி யாவும் தந்து
மக்கள் வாழ்வில்
நிலை உயர்த்தியது பாரதம்
உலகம் உய்யவே
கலகம் தவிர்த்திட
உரைத்தது என்றும் பாரதம்
உரைப்பதொன்று,உறுவதொன்று
என்றிருந்தால்
உருப்படுமா நம் பாரதம்?
பாரதம் மட்டுமா?பாரோர் யாவரும்
பண்பில் சிறந்திட வேண்டும்
பண்படுத்துதல் நிலங்களுக்கு மட்டுமா?
உளங்களுக்குமே கேளீர்
உளம் உயர்த்த நலமே பெருகும்
நன்மைகள் யாவும் சாத்தியமே
சாத்தியம் இவையெல்லாம் சத்தியமென்பது
சுதந்திர வாழ்வின் சூட்சுமமே!
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
GOOD THOUGHTS. IF EVERYONE THINKS LIKE THIS OUR COUNTRY WILL COME UP SOON. BEST OF LUCK.
''..இன்றும்
கருகும் உயிர்கள்
கறுப்புப் பண ஊழல்கள்
எங்கே போனது சுதந்திரம்? ...''.
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
சுதந்திர தினத்தின் தங்கள் உயர்ந்த சிந்தனை
அருமையிலும் அருமை
நல்ல தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்
நன்றி கோவைக்கவி.
தங்கள் ஆதங்கம், தங்கம் போன்ற வார்த்தைகளில் தெறித்து வந்து விழுந்தன
தங்களின் கருத்துரை சிறப்பான கவிதை வரியாக இருக்கிறது.நன்றி கோமதி மேடம்.
Post a Comment