Friday, August 12, 2011

புதுக் கவிதை

‘’ இனியொரு விதி செய்வோம்’’

செய்தாயிற்று,

இலக்கணம் வகுத்து

இலக்கியம் படைப்போம்

படைத்தாயிற்று.

படைத்த இலக்கியம்

செய்த விதி

பிழையென்றானது.

இலக்கண மரபு மீறல் ,

பிழையென்ற கொள்ளலாகாது

இலக்கியமில்லையென்றும்

தள்ளலாகாது,

புதுக்கவிதை எனவும்

புரிந்து கொள்ளலாம்.

2 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆபரணம் மிக அழகாகச் செய்கிறேன் எனச் சொல்லி
கலப்பு அதிகம் சேர்க்கத் துவங்கியதால்
தங்கக் கவிதையின் தரம் மிகக் குறைய ஆரம்பித்ததில்
எரிச்சலுற்ற கவிதைப் போற்கொல்லர்கள்
கண்டெத்த புதிய டிசைன்தான் புதுக் கவிதை
கவிதை ஆபரணம் பார்வைக்கு வேண்டுமானால்
கொஞ்சம் குறைபாடாகத் தோன்றலாம்
ஆயினும் தரத்தில் சமரசமில்லை
தங்களது கடைசி இரண்டு கவிதைகளிலும்
ஒரு புதிய முருகேஸ்வரியை காணமுடிகிறது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Murugeswari Rajavel said...

அழகான உவமைநயம் கொண்ட சிறப்பான கருத்துரை.மிக்க நன்றி ரமணி சார்.