வள்ளுவம் உரைத்திடாத வழிமுறைகளே வாழ்க்கையில் இல்லை.தலைப்பாய் அமைந்து இருக்கும் இவ்வடியானது வாழ்வின் உயர் பண்பான பணிவு குறித்துச் சொல்லுவதாய் அமைகின்றது. இந்த அடி பற்றிச் சொல்லுகின்றது அடக்கமுடைமை என்ற அதிகாரம்.இந்த அதிகாரத்தின் முதல் குறளானது பணிவு என்பது ஒருவரைத் தேவருக்கு ஒப்பாக்கும் என்பதனை,
'அடக்கம் அமரருள் உய்க்கும்'என்கிறது.
மேலும் சான்றாண்மை என்ற அதிகாரம் கூறுவதாவது,
'ஆற்றுவார் ஆற்றல் பணிதல்'.அஃதாவது , திறமையாளரின் மிகப் பெரிய திறமை பணிந்து நடப்பது என்கின்றது.
செல்வமுடைக்கும் படையாக திரிகடுகம் சொல்கிறது.
''தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும்''என்று.இஃது உணர்த்துவது அடக்கமில்லாமல் வீணாகக் கோபப் படுதல் செல்வத்தை அழிக்கும்.
இத்தகைய உயர் பண்பாகிய பணிவு நம்மிடம் இருந்தால் நாம் பேசுவன யாவும் இனிமையோடிருக்கும்.அதனையும் செந்நாப் புலவன் செப்புகின்றானே, 'இனியவை கூறலில்',
''சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்'' என்று
பணிவிருந்தால் பிறக்கும் சொற்கள் இனிமையோடு கூடியதாய் இருக்கும்.அவற்றைச் சொல்லுகின்றவர்க்கு இம்மை மட்டுமல்லாது,மறுமையிலும் கூட இன்பம் மட்டுமே விளையும்.
வாழ்வினில் வேண்டும் துணிவு
விலக்கிடல் வேண்டும் முனிவு
துணிவோடு சேர்ந்த கனிவு
இதற்கெலாம் வேண்டும் பணிவு.
11 comments:
இன்றைய நிலையில் அனைவருக்கும்
அவசியமான ஒன்று பணிதல்
இன்றைய நிலயில் அனைத்து நிலைகளிலும்
ஆணவம் தூக்கி இருப்பதே அனைத்து
பிரச்சனைகளுக்கும் மூல காரணமாய் இருக்கிறது
பயனுள்ள தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார்.
பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் என்ற பழைய பாடல் நினைவுக்கு வருகிறது. நல்ல பதிவு.
வாழ்வாங்கு வாழ வள்ளுவம்
வேண்டும்
நான் எழுதியுள்ள திருக்குறள்
கவிதையை படிக்க வேண்டும
கிறேன்
புலவர் சா இராமாநுசம்
நன்றி அப்பாதுரை சார்
கண்டிப்பாகப் படிக்கிறேன் ஐயா.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்
ஆசிரியர் தினத்திற்கு உங்கள் பதிவு
நிச்சயம் இருக்கும் என எண்ணினேன்
வாரம் ஒரு பதிவாவது தர வேணுமாய்
அன்புடன் கோரிக்கை வைக்கிறேன்
சாரி அக்கா.....நீங்க போட்ட கமெண்டுக்கு ரிப்ளை பண்ண முடியல...
தப்பா நெனச்சுக்காதிங்க.....
அக்கா.....கட்டுரை எழுத ஆரம்பிசுடிங்க போல.....நல்லா இருக்கு.
ஒரு நாள் நான் கேட்டேன்ல.....நிறைய எழுதுங்க.....வாழ்த்துக்கள்...
கட்டுரை வடிவத்துல எழுதுனாதான் புத்தியில நல்லா பதியும்....
நன்றி லிங்கேஸ்.சமயம் கிடைக்கும்போது வாசியுங்கள்.கருத்துச் சொல்லுங்கள். மகரிஷி குறித்த சிறப்பன பதிவுகளைத் தொடர்ந்து எழுதுங்கள்.
Post a Comment