Wednesday, October 27, 2010
விளையாட்டுத் துறை
இது
வெற்றுத் துறையல்ல,
வெற்றித் துறையே!
வீணர்களின் துறையல்ல,
இது
வீரர்களின் துறையே!
இந்த
விளையாட்டுக் களமென்ன
தேர்தல் களமா?
கண்டவர்களும் குதித்துவிட,
முயற்சியும் ,பயிற்சியோடு
முனைப்புடன் முயலும்
முழு வீச்சாளர்களின் களமிது
சாதனையாளர்கள் பலரும்
சோதனைகள் பல தாங்கி
சாதனைகள் செய்வோரே!
சாதிக்க முனைவோரும்
சஞ்சலம் கொள்ளாது
சரியாகப் பயிற்சி பெற்றால்
சாதனைப் பட்டியலிலே....
ஒலிம்பிக்
உலக விளையாட்டுத்துறை
அத்துணை நாடுகளின்
அழகழகான அணிவகுப்பு
தங்கம் எத்துணை?
வெள்ளி எத்துணை?
வெண்கலங்கள் தான்
எத்துணை?எத்துணை?
பலப்பல நாடுகளின்
பட்டியல் பார்த்தே
மலைத்துத் தான் போனோம்
மனதாரப் பாராட்டினோம்
ஐயகோ!
வெண்கலம் கூடப்
பெறாது
போயிருந்தால்-எம்
மண்ணின் நிலை?
வெட்டித் துறைதான் !
நம் பாரதத்தின் பயஸினால்
அட்லாண்டாவில் அடைந்ததை
சிட்னியிலும் தக்க வைத்தோம்-நம்
மண்ணின் மல்லீஸ்வரியால்
நூற்றிருபத்தெட்டாண்டு,
பின்
தங்கம் பெற்றோம்,ஆம்
தங்கம் பெற்றோம்!
அபிநவ் பிந்த்ரா !!
வெண்கலம் வென்ற சுசில்
வெற்றுத் துறைப்
பட்டியலில்
நாமும்!!
காமன் வெல்த் தங்கங்கள்
ஏராளம்!
தங்கங்களோடு ?
Tuesday, October 26, 2010
மொய்
இது மெய்யல்ல,
வெறும் பொய்!
வட்டியில்லாக் கடன்!!
வசதியைப் பொறுத்து
வட்டியுடனும் செலுத்தப்படும்.
மண(ன)முடன் தரும் மலருக்கு
மண்ணில் இணையுண்டோ?
கணக்கில்லாமல் தரும்
பொருளுக்கு
மனம் கணக்குப் போட்டிடுமே!
ஏதோ ஒரு நாள் தானே!
ஒரு சில மணித்துளி தானே!!
மனதார வாழ்த்துங்கள்,
மண விழாவினை!
பந்திக்குச் சென்று விட்டு
பணம் செலுத்துவதோடு சரியா?
மொய்யை மெய்யாக்குங்கள்!
பொய்யாக்கி,போஜனக் கட்டணம்
செலுத்தாதீர்கள்!
வெறும் பொய்!
வட்டியில்லாக் கடன்!!
வசதியைப் பொறுத்து
வட்டியுடனும் செலுத்தப்படும்.
மண(ன)முடன் தரும் மலருக்கு
மண்ணில் இணையுண்டோ?
கணக்கில்லாமல் தரும்
பொருளுக்கு
மனம் கணக்குப் போட்டிடுமே!
ஏதோ ஒரு நாள் தானே!
ஒரு சில மணித்துளி தானே!!
மனதார வாழ்த்துங்கள்,
மண விழாவினை!
பந்திக்குச் சென்று விட்டு
பணம் செலுத்துவதோடு சரியா?
மொய்யை மெய்யாக்குங்கள்!
பொய்யாக்கி,போஜனக் கட்டணம்
செலுத்தாதீர்கள்!
இருமனம் இணையும் திருமணம்
அகமிரண்டு அரவணைக்க
ஆர்ப்பரிக்கும் கூட்டங்கள்
அறுசுவை அலட்டல்களோடு
மனங்கள் இணைந்திட
மக்களின் திரள்களோடு
மாபெரும் மண்டபங்கள்
உள்ளங்கள் சேர்ந்திட
உறவினர் பெருக்கோடு
ஊரடைக்கும் பந்தல்கள்
காசு கொடுத்து வாங்கிய
பிரம்மாண்டமனைத்தும்
கனவாய் ,கானலாய்!
நல்லிதயங்கள் சேர்ந்தாலே
நலம் பெறும் நாடு!
வளம் பெறும் வீடு!!
Sunday, October 24, 2010
தேசீயப் பறவை
எண்ணற்ற பறவைக் கூட்டம்
விண்ணிலே சிறகடித்தாலும்
கண்ணைக் கவரும் பறவை,என்றவுடன்
பண்ணென மனதில் மலர்வது
நம் தேசியப் பறவை!
பகிர்ந்துண்ணும் பண்பினை
பாரோருக்கு உணர்த்துகிறாய்-ஆனால்
பார்வைக்கு நீ?
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு
காத்திருக்கும் தன்மைக்கு
காட்டு-ஆனால்
உன் நீண்ட கழுத்தும்,
நெடிய கால்களும்!
அசைந்தசைந்து நடக்கும் உன்னழகு
அசத்துவதாய் இருந்தாலும்
ஆர்டிக்கில் இருப்பதனால் காட்சிக்கே
அரிதாகிப் போகின்றாயே!
உந்தன் குரலினிமையிலே குழைந்து
கரைந்தானே எந்தன் பாரதி!பண்ணால்
கரைத்தாலும் கண்கவரவில்லையே நீ?
உன் பச்சை நிறம்
பரவசமூட்டலாம்
கொவ்வை அலகும்
அழகாயிருக்கலாம்
கான மழையே கவராத போது
உன் பேச்சு?
பருந்தோ,கருடனோ
பட்டியல் நீளமாயிருப்பினும்
பரவசத்தில் ஆழ்த்துவது
பாங்கான மயிலின் நடனம்
ஆம்,உந்தன் நீலவண்ணம்
நினைவில் நிற்கிறதென்றால்
அதனோடு கலந்த மிதமான
பசுமையும் பரவசமூட்டுகிறது,
தோகை விரித்தாடும்-உன்
நடனம் அற்புதமென்றால்
உதிர்ந்த பிறகும் கூட
உன்னதம் பெறுகிறதே-ஆம்
அரச கிரீடத்தில் அலங்காரமாய்,
அழகின் வாகனமே,நீ
அங்கீகாரம் பெற்றதிதனாலோ?
விண்ணிலே சிறகடித்தாலும்
கண்ணைக் கவரும் பறவை,என்றவுடன்
பண்ணென மனதில் மலர்வது
நம் தேசியப் பறவை!
பகிர்ந்துண்ணும் பண்பினை
பாரோருக்கு உணர்த்துகிறாய்-ஆனால்
பார்வைக்கு நீ?
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு
காத்திருக்கும் தன்மைக்கு
காட்டு-ஆனால்
உன் நீண்ட கழுத்தும்,
நெடிய கால்களும்!
அசைந்தசைந்து நடக்கும் உன்னழகு
அசத்துவதாய் இருந்தாலும்
ஆர்டிக்கில் இருப்பதனால் காட்சிக்கே
அரிதாகிப் போகின்றாயே!
உந்தன் குரலினிமையிலே குழைந்து
கரைந்தானே எந்தன் பாரதி!பண்ணால்
கரைத்தாலும் கண்கவரவில்லையே நீ?
உன் பச்சை நிறம்
பரவசமூட்டலாம்
கொவ்வை அலகும்
அழகாயிருக்கலாம்
கான மழையே கவராத போது
உன் பேச்சு?
பருந்தோ,கருடனோ
பட்டியல் நீளமாயிருப்பினும்
பரவசத்தில் ஆழ்த்துவது
பாங்கான மயிலின் நடனம்
ஆம்,உந்தன் நீலவண்ணம்
நினைவில் நிற்கிறதென்றால்
அதனோடு கலந்த மிதமான
பசுமையும் பரவசமூட்டுகிறது,
தோகை விரித்தாடும்-உன்
நடனம் அற்புதமென்றால்
உதிர்ந்த பிறகும் கூட
உன்னதம் பெறுகிறதே-ஆம்
அரச கிரீடத்தில் அலங்காரமாய்,
அழகின் வாகனமே,நீ
அங்கீகாரம் பெற்றதிதனாலோ?
Saturday, October 23, 2010
தவம்
மோனத்தின் உச்ச நிலை
மோட்சத்தின் உன்னத நிலை
துயர் விடுத்த நிலை
உயர்வு எடுத்த நிலை
மகோன்னத நிலை
மாசகன்ற நிலை
மாயை விடுத்த நிலை
மனது உயர்ந்த நிலை
சித்தர் தொட்ட நிலை
சீற்றம் விட்ட நிலை
எவர்க்கும் பிடுத்த நிலை
எய்த முடியாப் பெரு நிலை
துயர் சூழ்ந்த துன்ப உலகில்
துவள்கிறது உள்ளம்
தூங்காமல் தூங்கிச் சுகமே காண
துடிக்கிறது உள்ளம்
துன்ப நிலை அறுத்து
இன்பமே காணும் வழி
தவம் !
மோட்சத்தின் உன்னத நிலை
துயர் விடுத்த நிலை
உயர்வு எடுத்த நிலை
மகோன்னத நிலை
மாசகன்ற நிலை
மாயை விடுத்த நிலை
மனது உயர்ந்த நிலை
சித்தர் தொட்ட நிலை
சீற்றம் விட்ட நிலை
எவர்க்கும் பிடுத்த நிலை
எய்த முடியாப் பெரு நிலை
துயர் சூழ்ந்த துன்ப உலகில்
துவள்கிறது உள்ளம்
தூங்காமல் தூங்கிச் சுகமே காண
துடிக்கிறது உள்ளம்
துன்ப நிலை அறுத்து
இன்பமே காணும் வழி
தவம் !
Friday, October 22, 2010
வழி(லி)பாடு
இறை வழிபாடென்பது
இன்னலா?இம்சையா?
இசையென்ற பேரிலே
இரைச்சல்!
வழிபடுதல் உனக்கு மட்டும்
தானே? பிறரை,
வலி பட வைப்பதேனோ?
அலறல்களாலே நிகழும்
அவஸ்தை விலக்கு,
ஆன்மீக வழிபாடு மனதை
அமைதியாக்கும்!
ஆன்மீகப் பாதை மனதை
அவஸ்தையிலிருந்து
விலக்கும்
ஆன்மீகப் பாதையே -நமை
அகிலம் உணர வைக்கும்
ஆன்மீகப் பாதையே-வாழ்வின்
ஆற்றல் களமாயிருக்கும்.
இறை உணர் !
இதயத்தில் வைத்து !!
இன்னலா?இம்சையா?
இசையென்ற பேரிலே
இரைச்சல்!
வழிபடுதல் உனக்கு மட்டும்
தானே? பிறரை,
வலி பட வைப்பதேனோ?
அலறல்களாலே நிகழும்
அவஸ்தை விலக்கு,
ஆன்மீக வழிபாடு மனதை
அமைதியாக்கும்!
ஆன்மீகப் பாதை மனதை
அவஸ்தையிலிருந்து
விலக்கும்
ஆன்மீகப் பாதையே -நமை
அகிலம் உணர வைக்கும்
ஆன்மீகப் பாதையே-வாழ்வின்
ஆற்றல் களமாயிருக்கும்.
இறை உணர் !
இதயத்தில் வைத்து !!
Thursday, October 21, 2010
பொம்மை
மழலை களிக்கிறது
மண் பொம்மை வைத்து
களித்த குழந்தை
களைப்புறும் போதிலே
உடைத்தும் களிக்கிறது.
மாயவன் களிக்கிறான்
மனித பொம்மை வைத்து
சூத்ரதாரி நூலை விட்டால்
மழலை உடைத்திட்ட
மண் பொம்மையே -இந்த
மனித சரீரம் !
Saturday, October 16, 2010
வன்முறை வலி
ஈழத்திலே சண்டையிட்டால் -எம்
மனசு வலிக்குது
ஈராக்கிலே யுத்தமென்றால் -எம்
மனசு துடிக்குது
காசுமீர பூமியும் தான்
கதி கலங்கு நிக்குது
கத்திச்சண்டை போட்டா நாம
காசுமீரத்தை மீட்பது?
இரட்டைக் கோபுரம் இடிபட்டாலும்
எட்டி நின்றா பார்ப்பது?
தட்டுக் கெட்ட மனிதக் கூட்டம்
தறி கெட்டுத் தான் நடக்குது
மும்பையிலே குண்டு வைச்சு
வம்பு செய்யும் வன்முறை
நம்பி நம்மை வந்த அயல்நாட்டவரும்
வெம்புது -தம்பி இதைக்
கேட்டு நாளும்
தர்க்கமெல்லாம் தள்ளி வை-மனித
வர்க்கமெல்லாம் உயர்ந்திடவே
வன்முறைக்குக் கொள்ளி வை.
மனசு வலிக்குது
ஈராக்கிலே யுத்தமென்றால் -எம்
மனசு துடிக்குது
காசுமீர பூமியும் தான்
கதி கலங்கு நிக்குது
கத்திச்சண்டை போட்டா நாம
காசுமீரத்தை மீட்பது?
இரட்டைக் கோபுரம் இடிபட்டாலும்
எட்டி நின்றா பார்ப்பது?
தட்டுக் கெட்ட மனிதக் கூட்டம்
தறி கெட்டுத் தான் நடக்குது
மும்பையிலே குண்டு வைச்சு
வம்பு செய்யும் வன்முறை
நம்பி நம்மை வந்த அயல்நாட்டவரும்
வெம்புது -தம்பி இதைக்
கேட்டு நாளும்
தர்க்கமெல்லாம் தள்ளி வை-மனித
வர்க்கமெல்லாம் உயர்ந்திடவே
வன்முறைக்குக் கொள்ளி வை.
Friday, October 15, 2010
கல்வியின் சிறப்பு
கல்வியில்லை என்றாலே ஏலேலோ ஐலசா
களர் நிலமே போலாவாய் ஏலேலோ ஐலசா
தரிசு நிலம் போலாவாய் ஏலேலோ ஐலசா
தற்குறியாய் நீ இருந்தால் ஏலேலோ ஐலசா
படிப்பினாலே நீ உயர்ந்தால் ஏலேலோ ஐலசா
பார் போற்ற வாழலாமே ஏலேலோ ஐலசா
தாழ்ந்த வாழ்க்கை தனிலேதான் ஏலேலோ ஐலசா
தன்னிறைவு உண்டா?சொல் ஏலேலோ ஐலசா
உயர்ந்த வாழ்க்கை உண்டானால் ஏலேலோ ஐலசா
உன்னதமாய் நீ வாழ்வாய் ஏலேலோ ஐலசா
உயர்ந்த வாழ்க்கை பெற்றிடவே ஏலேலோ ஐலசா
உயர்கல்வி என்றும் வேண்டும் ஏலேலோ ஐலசா
உயர்கல்வி என்றும் வேண்டும் ஏலேலோ ஐலசா
களர் நிலமே போலாவாய் ஏலேலோ ஐலசா
தரிசு நிலம் போலாவாய் ஏலேலோ ஐலசா
தற்குறியாய் நீ இருந்தால் ஏலேலோ ஐலசா
படிப்பினாலே நீ உயர்ந்தால் ஏலேலோ ஐலசா
பார் போற்ற வாழலாமே ஏலேலோ ஐலசா
தாழ்ந்த வாழ்க்கை தனிலேதான் ஏலேலோ ஐலசா
தன்னிறைவு உண்டா?சொல் ஏலேலோ ஐலசா
உயர்ந்த வாழ்க்கை உண்டானால் ஏலேலோ ஐலசா
உன்னதமாய் நீ வாழ்வாய் ஏலேலோ ஐலசா
உயர்ந்த வாழ்க்கை பெற்றிடவே ஏலேலோ ஐலசா
உயர்கல்வி என்றும் வேண்டும் ஏலேலோ ஐலசா
உயர்கல்வி என்றும் வேண்டும் ஏலேலோ ஐலசா
Wednesday, October 13, 2010
மானுடம் காப்போம்
சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்த ஜெயபாலன் தன் சோலைக்குள் நுழைந்தார்.ஆம்,அது சோலை தான்.தென்னஞ்சோலை.தோப்பு என்பதை விட பூத்துக் காய்த்துக் குலுங்கிய அதனை சோலை என்பதே சாலப் பொருந்தும்.
ஒவ்வொரு மரமாய்ப் பார்த்துக் கொண்டே சுற்றி வந்தவருக்கு நேற்றைக்கு தன் மகனிடமிருந்து வந்த மின்னஞ்சல் நினைவுக்கு வந்த்து.
பச்சை அட்டை வாங்கிக் கொண்டு அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கிருக்கும் மகன் எவ்வளவு அழைத்த போதும் மறுத்து விட்ட தந்தைக்கு அங்கிருக்கும் காட்சிகளில் சிலவற்றைப் பதிவு செய்து அனுப்பியிருந்தான் விமல்.அதிலொன்று தான் இந்த வனப்பு மிகு வண்ண மரங்கள்.
அவரின் எண்ண ஓட்டம் சற்றே பின்னோக்கி ஓடியது.சென்ற வாரம் கலந்து கொண்ட விவசாயக் கருத்தரங்கிலே பேசிய ஒரு விஷயம் நினைவுக்கு வந்த்து.புவி வெப்பமயமாதலுக்கு மரங்களை வெட்டுதலும் காரணம் என்றார்கள்.பசுஞ்சோலைக்குள் நின்று கொண்டு வண்ண மரங்களை தரிசித்து வாழும் நான் புவியில் ஏற்படும் இப்பிரச்சனைக்கு என்ன செய்யப் போகிறேன்?மனதினுள் எழுந்த கேள்விக்கு அப்போதே பதிலும் சொல்லிக் கொண்டார்.
மரக்கன்றுகளை உருவாக்கி அதைப் பல தொண்டு நிறுவனங்களின் மூலம் நடச் செய்வது என்று.அதற்குத் தொடக்கமாக ஒரு மரக்கன்றை எடுத்துச் சென்று அருகிலுள்ள பள்ளி வளாகத்தில் நட்டுவிட்டு வந்தார்.மனநிறைவுடன் வீட்டுக்குள் நுழைந்தவாறே சொல்லிக் கொண்டார்.
''மரம் வளர்ப்போம் ,மானுடம் காப்போம்''என்று
ஒவ்வொரு மரமாய்ப் பார்த்துக் கொண்டே சுற்றி வந்தவருக்கு நேற்றைக்கு தன் மகனிடமிருந்து வந்த மின்னஞ்சல் நினைவுக்கு வந்த்து.
பச்சை அட்டை வாங்கிக் கொண்டு அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கிருக்கும் மகன் எவ்வளவு அழைத்த போதும் மறுத்து விட்ட தந்தைக்கு அங்கிருக்கும் காட்சிகளில் சிலவற்றைப் பதிவு செய்து அனுப்பியிருந்தான் விமல்.அதிலொன்று தான் இந்த வனப்பு மிகு வண்ண மரங்கள்.
அவரின் எண்ண ஓட்டம் சற்றே பின்னோக்கி ஓடியது.சென்ற வாரம் கலந்து கொண்ட விவசாயக் கருத்தரங்கிலே பேசிய ஒரு விஷயம் நினைவுக்கு வந்த்து.புவி வெப்பமயமாதலுக்கு மரங்களை வெட்டுதலும் காரணம் என்றார்கள்.பசுஞ்சோலைக்குள் நின்று கொண்டு வண்ண மரங்களை தரிசித்து வாழும் நான் புவியில் ஏற்படும் இப்பிரச்சனைக்கு என்ன செய்யப் போகிறேன்?மனதினுள் எழுந்த கேள்விக்கு அப்போதே பதிலும் சொல்லிக் கொண்டார்.
மரக்கன்றுகளை உருவாக்கி அதைப் பல தொண்டு நிறுவனங்களின் மூலம் நடச் செய்வது என்று.அதற்குத் தொடக்கமாக ஒரு மரக்கன்றை எடுத்துச் சென்று அருகிலுள்ள பள்ளி வளாகத்தில் நட்டுவிட்டு வந்தார்.மனநிறைவுடன் வீட்டுக்குள் நுழைந்தவாறே சொல்லிக் கொண்டார்.
''மரம் வளர்ப்போம் ,மானுடம் காப்போம்''என்று
Saturday, October 9, 2010
வாழ்வின் வஞ்சம்
முதல் பாட வேளை.தமிழ் வகுப்பு.''அன்ன யாவினும் புண்ணியம் கோடி ,ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்''.நேற்றைக்கு கரும்பலகையில் எழுதியது இன்னும் அழிக்கப் படாமலேயே இருந்த்து.எட்டாம் வகுப்பில் நுழைந்த ஆசிரியை மகேஸ்வரி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை வாசித்து வருகையினைப் பதிவு செய்தார்.
நசீர் அகமது இன்றைக்கும் வரவில்லை.ஆசிரியை குமரனை நோக்கி , ''குமரா! நீ நசீரின் பக்கத்து வீட்டில் தானே இருக்கே.அவன் வராத்தற்கான காரணம் தெரியாதா?ஒரு வாரமாச்சே அவன் வந்து.ஏனென்று காரணம் தெரிந்து கொண்டு வா'' என்று சொல்லி விட்டு பாடத்தை ஆரம்பித்தார்.
பாடத்தை முடித்து விட்டு ஆசிரியர்களின் ஓய்வறைக்கு
வந்த மகேஸ்வரி புஷ்பா டீச்சரைப் பார்த்துச் சொன்னார் ,''எட்டாம் வகுப்பில் இருக்கும் நசீர் ஒரு வாரமா வரலை.நீங்களும் அந்த வகுப்பில் கணிதம் எடுக்கறீங்க.உங்களுக்கும் தெரிந்திருக்கும்.ஏனென்றால் அவன் மிக நன்றாகப் படிக்கும் மாணவனாயிற்றே.புஷ்பா ,''ஆமா,நானும் கவனித்தேன்.காரணம் தெரியலே.உடம்பு சரியில்லையோ என்னவோ?என்றார்கள்.
மகேஸ்வரிக்கு அவனுக்கு என்னவாகியிருக்குமோ?ஏன் வரவில்லை? என்ற எண்ணமே மேலோங்கியிருந்த்து.அடுத்த நாள் வகுப்பினுள் நுழைந்தவுடனே குமரனைப் பார்த்து,''என்ன குமரா?நசீரைப் பார்த்து விட்டு வந்தாயா?என்ன சொன்னான் ,உடம்பு சரியில்லையா? என்று கேட்டார். ''இனி மேல் அவன் வரமாட்டானாம்.தோல் தொழிற் சாலைக்கு வேலைக்குப் போகிறானாம்''என்றான் குமரன்.அவன் சொன்ன பதிலால் வருத்தமுற்று ,''நாளை அவனைக் கண்டிப்பாக பெற்றோருடன் வரச் சொல் ''என்றார் குமரனை நோக்கி.
மறுநாள் மூன்றாவது பாடவேளையின் போது ஏழாம் வகுப்பில் தமிழ் எடுத்துக் கொண்டிருந்தார் மகேஸ்வரி.குமரன் நடுத்தர வயதுப் பெண் ஒருவருடன் வந்து கொண்டிருந்தான்.''டீச்சர் ,இவங்க நசீரின் அம்மா''என்றான் குமரன. சொல்லி விட்டு அவன் தன் வகுப்பறை நோக்கி ஓடினான்.
மகேஸ்வரி நசீரின் அம்மாவைப் பார்த்து பள்ளியில் புத்தகமும்,கட்டணமும் இலவசம்.சீருடை,பேனா,பென்சிலுக்கான செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.நீங்கள் அவனைப் பள்ளிக்கு அனுப்புங்கள் என்றார். உடனே நசீரின் அம்மா ''இவன் வாப்பா எங்களை விட்டுவிட்டுப் போய் விட்டார்.வீட்டில் நாலு ஜீவன்கள் இருக்கோம்.வீட்டுச் செலவுக்கு என்னம்மா செய்வது? இந்தக் கேள்விக்கு மகேஸ்வரியிடம் விடையில்லை.
மாலை பள்ளி விட்டதும் வீடு செல்வதற்காக வழக்கமாக வரும் ஆட்டோ பள்ளி வாயிலின் முன் வந்து நின்றது.இத்தனை நாளும் கவனித்துப் பார்த்த்தில்லை.இன்று கண்ணில் பட்ட அந்த வாசகம் மனதில் வலியை ஏற்படுத்தியது. ''குழந்தைத் தொழிலை அனுமதியோம் ''.
Tuesday, October 5, 2010
தமிழே
தரணியெல்லாம் உன் புகழ்க்கொடி
தரம் உயர்ந்து பறந்திட வேண்டும்
தன்னிகரில்லா கவிஞர்களாலே
தனித்துவம் நாளும் அடைந்திட
வேண்டும்!
உலகினுக்கே பொதுமறை தந்த
உயர்ந்த தமிழே!
உன்னாலே எங்களிடம் என்றும்
உன்னதம் தங்கிடுமே !
கன்னித் தமிழ் இன்று
கணினித் தமிழுமாய் !
இணையம் எம்மொழியாலும்
இணையட்டும்
இன்னமுத மொழி எம்
இயக்கமாய் இருந்திட
வேண்டும் !
தமிழிலே கையெழுத்து
தலையெழுத்தே தமிழெழுத்தாய்!
சுருக்கொப்பம் இடுவதும் -எம்
விருப்பொப்பமாய் !
தரம் உயர்ந்து பறந்திட வேண்டும்
தன்னிகரில்லா கவிஞர்களாலே
தனித்துவம் நாளும் அடைந்திட
வேண்டும்!
உலகினுக்கே பொதுமறை தந்த
உயர்ந்த தமிழே!
உன்னாலே எங்களிடம் என்றும்
உன்னதம் தங்கிடுமே !
கன்னித் தமிழ் இன்று
கணினித் தமிழுமாய் !
இணையம் எம்மொழியாலும்
இணையட்டும்
இன்னமுத மொழி எம்
இயக்கமாய் இருந்திட
வேண்டும் !
தமிழிலே கையெழுத்து
தலையெழுத்தே தமிழெழுத்தாய்!
சுருக்கொப்பம் இடுவதும் -எம்
விருப்பொப்பமாய் !
Saturday, October 2, 2010
தேடல்
பட்டியிலிருந்து வந்து
பட்டணம் சேர்ந்து
பட்டம் பெற்றிட
பலப்பலத் தேடல்
சகல வசதிகளோடும்
சந்தோஷப் பொழுதுகளோடும்
சான்றிதழ் பெற்றிடவே
சிலப்பல தேடல்கள் -பின்
தேடித் தேடி அலுத்த வேலை
திடீரென வந்த்து -பலப்பல
திங்களும் பார்த்திட்ட பின்னே
வாராதிருந்தாலும் கூட
வாடாதிருந்திருக்கலாமோ?
வந்த வேலையினால்
சிந்தை நொந்துவிட்டது
தொடர்கின்றது தேடல்......
பட்டணம் சேர்ந்து
பட்டம் பெற்றிட
பலப்பலத் தேடல்
சகல வசதிகளோடும்
சந்தோஷப் பொழுதுகளோடும்
சான்றிதழ் பெற்றிடவே
சிலப்பல தேடல்கள் -பின்
தேடித் தேடி அலுத்த வேலை
திடீரென வந்த்து -பலப்பல
திங்களும் பார்த்திட்ட பின்னே
வாராதிருந்தாலும் கூட
வாடாதிருந்திருக்கலாமோ?
வந்த வேலையினால்
சிந்தை நொந்துவிட்டது
தொடர்கின்றது தேடல்......
Friday, October 1, 2010
அகத் தூய்மை
சூத்திரங்களால் மனதைச்
சுத்தப்படுத்தி விட முடியாது
அறிவியல் ஆய்வினால்
அகத்தை அழகாக்க முடியாது
அறிவை மேம்படுத்த இவை
யாவும் அவசியமே!
அகத்தை மேம்படுத்த
அழகாய்ச் சமைத்த
அற்புதக் கவிதைகளும்
அறத்தை வலியுறுத்தும்
ஆன்மீக கதைகளுமே
அவசியத் தேவை ,மட்டுமல்ல
அத்தியாவசியத் தேவையுமே .
சுத்தப்படுத்தி விட முடியாது
அறிவியல் ஆய்வினால்
அகத்தை அழகாக்க முடியாது
அறிவை மேம்படுத்த இவை
யாவும் அவசியமே!
அகத்தை மேம்படுத்த
அழகாய்ச் சமைத்த
அற்புதக் கவிதைகளும்
அறத்தை வலியுறுத்தும்
ஆன்மீக கதைகளுமே
அவசியத் தேவை ,மட்டுமல்ல
அத்தியாவசியத் தேவையுமே .
Thursday, September 30, 2010
வல்லரசா?நல்லரசா?
வாழ்க்கை ஒரு வாய்ப்பு -அது
நேசமெனும் ரோஜாக்கள் பூக்கும் பூமி
வாழ்க்கை ஒரு வரம் -அது
பாசமெனும் தென்றல் தவழும் பூந்தோட்டம்
அதில்,
அடிமைத்தளை என்பது அரக்கத்தனம்
அல்ல்லுறுத்துவது என்பது அசுரத்தனம்
அரக்கத்தனத்தை அழித்தோம்
அந்நியராட்சி அகற்றினோம்
தென்றல் தவழும் பூந்தோட்டத்தில்
ரோஜாவின் மணம் கமழ்ந்த்து
நாசி முழுவதும் நறுமணம்
சுவாசம் முழுவதும் இனிய வாசம்
நுகர்ந்த வாசத்தை அனுபவிக்கு முன்னே
அடுக்கடுக்காய் துர் வாசனை,
சாதிச் சண்டையாய்,
சமயப் பூசலாய்,
இன வெறியாய்,
அன்பு எப்போது தழைக்கும்?
அகிலம் என்றைக்கு சிறக்கும்?
துன்பம் எப்போது கரையும்?
இன்பம் என்றைக்கு வளரும்?
தழைக்கும் ,சிறக்கும்
மலரும் ,வளரும்
நேர்மையாலே ,மன ஓர்மையாலே,
அன்பாலே,நல்ல பண்பாலே.
அன்பு மலர்த்தி
ஆற்றல் பெருக்கி
இன்பம் நிறைத்து
ஈகையோடிருந்தால்
யாவும் கைகூடும்
ஆன்மீக பூமி என
அகிலம் முழுவதிலும்
அறியப்படும் நம்
அன்னை பூமி
வல்லரசாக வேண்டாமா?
வேண்டும் !முதலில்
நல்லரசாக மலரட்டும்
'வல்லரசு' தானே உருவாகும்.
நேசமெனும் ரோஜாக்கள் பூக்கும் பூமி
வாழ்க்கை ஒரு வரம் -அது
பாசமெனும் தென்றல் தவழும் பூந்தோட்டம்
அதில்,
அடிமைத்தளை என்பது அரக்கத்தனம்
அல்ல்லுறுத்துவது என்பது அசுரத்தனம்
அரக்கத்தனத்தை அழித்தோம்
அந்நியராட்சி அகற்றினோம்
தென்றல் தவழும் பூந்தோட்டத்தில்
ரோஜாவின் மணம் கமழ்ந்த்து
நாசி முழுவதும் நறுமணம்
சுவாசம் முழுவதும் இனிய வாசம்
நுகர்ந்த வாசத்தை அனுபவிக்கு முன்னே
அடுக்கடுக்காய் துர் வாசனை,
சாதிச் சண்டையாய்,
சமயப் பூசலாய்,
இன வெறியாய்,
அன்பு எப்போது தழைக்கும்?
அகிலம் என்றைக்கு சிறக்கும்?
துன்பம் எப்போது கரையும்?
இன்பம் என்றைக்கு வளரும்?
தழைக்கும் ,சிறக்கும்
மலரும் ,வளரும்
நேர்மையாலே ,மன ஓர்மையாலே,
அன்பாலே,நல்ல பண்பாலே.
அன்பு மலர்த்தி
ஆற்றல் பெருக்கி
இன்பம் நிறைத்து
ஈகையோடிருந்தால்
யாவும் கைகூடும்
ஆன்மீக பூமி என
அகிலம் முழுவதிலும்
அறியப்படும் நம்
அன்னை பூமி
வல்லரசாக வேண்டாமா?
வேண்டும் !முதலில்
நல்லரசாக மலரட்டும்
'வல்லரசு' தானே உருவாகும்.
Monday, September 13, 2010
ஆட்சி மொழியில் தமிழ்
அமுதே தமிழே, அழகிய மொழியே
எனதுயிரே,சுகம் தரும் கவிதைகள் தா!
அன்னையே!தமிழன்னையே ,
ஆட்சி பீடத்தில் அமர்ந்திட்டு
ஆண்டுகள் ஐம்பது கண்டாய்
ஆற்றல் தந்து நின்றாய்!
சுந்தரத் தமிழே உனை வணங்குகிறேன்
சுவையோடு சுகமாய் என்னுள் வாழ்ந்திடு!
தரம் நிறை தமிழே!தண்டமிழ்க் கவியாகும்
வரம் எனக்குத் தந்திடு!சிரம் தாழ்த்துகின்றேன்!
ஆட்சியில் அமர்ந்தே ஐம்பதாண்டுகள்-உந்தன்
ஆதியோ ஆயிரமாயிரம் ஆண்டுகள் !!
வாழ்த்த வார்த்தை இல்லை ,வணங்கிப் பா
பாடுகின்றேன் !வணங்கா முடி உனக்கு.
எனதுயிரே,சுகம் தரும் கவிதைகள் தா!
அன்னையே!தமிழன்னையே ,
ஆட்சி பீடத்தில் அமர்ந்திட்டு
ஆண்டுகள் ஐம்பது கண்டாய்
ஆற்றல் தந்து நின்றாய்!
சுந்தரத் தமிழே உனை வணங்குகிறேன்
சுவையோடு சுகமாய் என்னுள் வாழ்ந்திடு!
தரம் நிறை தமிழே!தண்டமிழ்க் கவியாகும்
வரம் எனக்குத் தந்திடு!சிரம் தாழ்த்துகின்றேன்!
ஆட்சியில் அமர்ந்தே ஐம்பதாண்டுகள்-உந்தன்
ஆதியோ ஆயிரமாயிரம் ஆண்டுகள் !!
வாழ்த்த வார்த்தை இல்லை ,வணங்கிப் பா
பாடுகின்றேன் !வணங்கா முடி உனக்கு.
Sunday, August 29, 2010
நல்ல நாள்
ஆன்மீக வாழ்வு தன்னில்
ஆனந்தித்திருக்கும் நாள்
எல்லாம் நல்ல நாளே!
இயற்கையோடு இயைந்து
இன்புற்றிருக்கும் நாள்
எல்லாம் நல்ல நாளே!
அன்பு கெழுமிய வாழ்வு தனில்
அக்கறை கொள்ளும் நாள்
எல்லாம் நல்ல நாளே!
எல்லையற்று விரிந்த உலகில்
எல்லாமாய் இருப்பதனை வணங்கும்
நாள்
எல்லாம் நல்ல நாளே!
அஷ்டமியாலும் அசையாது
நவமியாலும் நலியாது
நாளெல்லாம் நலம் காண
நம்பிடுவோம் இறைநிலையை
நாடிடுவோம் நல்லறத்தை!
எண்கள் நமது கண்களாமே!
இருந்தாலென்ன?
இராகு,கேது கிரக நிலை
வந்தாலென்ன?
இயற்கையின் சுழற்சியில்
எல்லாமே இருந்திடுமே,
இறை நிலை பற்றுவோம்,
இழி நிலை அகற்றுவோம்!
ஆனந்தித்திருக்கும் நாள்
எல்லாம் நல்ல நாளே!
இயற்கையோடு இயைந்து
இன்புற்றிருக்கும் நாள்
எல்லாம் நல்ல நாளே!
அன்பு கெழுமிய வாழ்வு தனில்
அக்கறை கொள்ளும் நாள்
எல்லாம் நல்ல நாளே!
எல்லையற்று விரிந்த உலகில்
எல்லாமாய் இருப்பதனை வணங்கும்
நாள்
எல்லாம் நல்ல நாளே!
அஷ்டமியாலும் அசையாது
நவமியாலும் நலியாது
நாளெல்லாம் நலம் காண
நம்பிடுவோம் இறைநிலையை
நாடிடுவோம் நல்லறத்தை!
எண்கள் நமது கண்களாமே!
இருந்தாலென்ன?
இராகு,கேது கிரக நிலை
வந்தாலென்ன?
இயற்கையின் சுழற்சியில்
எல்லாமே இருந்திடுமே,
இறை நிலை பற்றுவோம்,
இழி நிலை அகற்றுவோம்!
Subscribe to:
Posts (Atom)


























