Monday, November 29, 2010
பொழுது புலர்கிறது
நீல வானின் அடிவயிற்றில்
செந்நிற மேகச் சிதறல்
புறப்படுகிறது புத்தொளியுடன்
சூரியக் குழந்தை!
பொழுது புலர்கிறது,
புலர்ந்த பொழுது மலர்கிறது,
மலரின் மணமாய்,
பறவையின் பூபாளமாய்,
பூங்காற்றின் வருடலாய்,
பொழுது புலர்கிறது !!!
இன்பம் தரும் இயற்கையை
இதமாய் நுகரும் வேளையிலே
இதயத்தில் நெருடலாய்.....
இனிமை மறைகிறது,இன்னல்
விளைகிறது.
பொழுது புலர்கிறது,
செந்நிற மேகத்தையும்
சிதறடிக்கும் கரிப்புகையாய்,
ஆலையின் கழிவுகளாய்,
ஆழியில் அமிழும்
ஆண்டவனாலும் கூட,
புலர்ந்த பொழுதினிலும்
எங்கும் இருளே! எதிலும் இருளே!
சத்தம் சூழ் உலகினிலே
சுத்தமும் பேணுவோம்!
அசுத்தத்தால்,
சாக்காட்டில் சாயும் அவனியை
பூக்காடாக்குவோம்.
விஞ்ஞான உலகினிலே
அஞ்ஞான இருளகற்றி
மெய்ஞான விளக்கற்றுவோம்!
இருள் அகலும்,இதயத்திலிருந்தும்
பொழுது புலரும்,எங்கும்
ஆனந்தம் மலரும்.
Friday, November 26, 2010
படைப்புக் கடவுள்
பிரம்மனே,
கணிப்பொறி உண்டா
உன்னிடத்தில் ?
கணக்கற்ற உருவங்களை
உருவாக்கித் தருகிறாயே!
எத்தனை கோடி முகங்கள்-அதில்
எத்தனை கோடி அகங்கள் !
வடிவமைத்திடும் போது
வல்லவர்களையே ஆக்கு,
பிண்டங்களைப் பிடிக்கும்போது
தண்டங்களைத் தவிர்த்திடு
வாழ்வெனும் வரம்
வனப்பு மிகு கவிதை!
வரம் தருவாயோ ?
வாழ்வு மலர்த்துவாயோ?
வடிவமைக்கும் நீயே பொறுப்பு !
Thursday, November 25, 2010
மலர்
உலகின் அழகு
அனைத்தும் உன்னிலே!
திலகம் நீயே
மணத்திலும்,மரணத்திலும்!
கலக மனதிலும்
கனிவு தோற்றி
விலக வைப்பாய்
கடுமை தனை -மனதில்
விழிப்பு நிலை தந்து
களிப்பு தனைத் தருவாய்!
Wednesday, November 24, 2010
சொட்டு மருந்து
வாழ்வெனும் வானில்
சிறகடித்துப் பறக்க வேண்டாம்
நடக்கவாவது வேண்டுமல்லவா?
வாழ்வெனும் ஆழ்கடலில் நீந்தி
முத்தெடுக்க வேண்டாம்
குறைந்த பட்சம் மூழ்காதிருக்கலாம்!
சாதனையாளர் பட்டியலில்
சேர்ந்திடாவிடினும்,
சோதனைகளாவது வேண்டாம் !
வியப்புக் குறியாக மாறாவிடினும்
கேள்விக் குறியாக மாற வேண்டாம்
கேலிக்கு ஆளாக வேண்டாம்
ரோமியோவாய் வலம் வராவிடினும்
சாமியே என மூலையில் சாய
வேண்டாம்
போலியோ சொட்டு கொடுப்போம் !
பொன்னான வாழ்வு அமைப்போம் !!
Tuesday, November 16, 2010
தாயகம்
பாரதத் தாயே !
அந்நியரின் தாக்குதலாலே
அவதியுற விடாது
முப்படை வீரரும்
முழு மூச்சுடன் காப்பரே!-இம்
மண்ணில் இருந்தே உனை
இன்னல் செய்வோரை
என்ன செய்வது?
நாட்டோரே உனை
நாசம் செயும்போது உனக்கு
எங்கிருந்து வரும் சுவாசம்?
நித்தம் ஒரு
சாதிச் சண்டை,
நாளும் ஒரு
மதக் கலவரம்.
குருதி கொதிக்கிறது -ஆனால்
கும்பிட்டு வழி விடுகிறோம்
கொலை பாதகரைக் கண்டு
உனது உடலெல்லாம்
இரண களம்-உன்னை
மலரால் வருடிவிட
நீட்டிய கைகளை
மத வெறியன் வெட்டினான்
சந்தனம் பூசிவிட
நீட்டிய கைகளை
சாதி வெறியன் சிதைத்தான்
சந்தனம் ,மலரோடு
குருதியும் மண்ணில்
உனக்கு அபிஷேகமாய்!
மாறுமா?மறையுமா?
மகிழ்வான நிலை மலருமா?
இந்திய அன்னையே,
புகழ் வடிவான உன்னை
புண்ணாக்குகின்றனர் புல்லர்கள்
புல்லர்களை அழித்துப்
புரட்சி செய்யும் போது தான்
புனிதம் பெறுவாயோ?
அந்நியரின் தாக்குதலாலே
அவதியுற விடாது
முப்படை வீரரும்
முழு மூச்சுடன் காப்பரே!-இம்
மண்ணில் இருந்தே உனை
இன்னல் செய்வோரை
என்ன செய்வது?
நாட்டோரே உனை
நாசம் செயும்போது உனக்கு
எங்கிருந்து வரும் சுவாசம்?
நித்தம் ஒரு
சாதிச் சண்டை,
நாளும் ஒரு
மதக் கலவரம்.
குருதி கொதிக்கிறது -ஆனால்
கும்பிட்டு வழி விடுகிறோம்
கொலை பாதகரைக் கண்டு
உனது உடலெல்லாம்
இரண களம்-உன்னை
மலரால் வருடிவிட
நீட்டிய கைகளை
மத வெறியன் வெட்டினான்
சந்தனம் பூசிவிட
நீட்டிய கைகளை
சாதி வெறியன் சிதைத்தான்
சந்தனம் ,மலரோடு
குருதியும் மண்ணில்
உனக்கு அபிஷேகமாய்!
மாறுமா?மறையுமா?
மகிழ்வான நிலை மலருமா?
இந்திய அன்னையே,
புகழ் வடிவான உன்னை
புண்ணாக்குகின்றனர் புல்லர்கள்
புல்லர்களை அழித்துப்
புரட்சி செய்யும் போது தான்
புனிதம் பெறுவாயோ?
Monday, November 15, 2010
மன சாம்ராஜ்யம்
மன சாம்ராஜ்யத்தின் மன்னனே!
ஆகாயம் நீ -உன்னுள்ளே
அகில உலகும் அடங்கட்டும்!
கிருஷ்ணனாய் லீலைகள் காட்டு,
கிருஷ்ண லீலா காட்டாதே!
உங்கு உங்கென்று உன் சங்கநாதம்
முழங்கினால்,
தமிழ் கூடக் கசக்கிறதே.
தமிழாலே தாலாட்டுவேன்
தமிழாலே சீராட்டுவேன்
தரமாய் வளர்ந்திடு!
தமிழோடு வளர்ந்திடு!!
தன்னிகரற்று வாழ்ந்திடு!!!
பஞ்சுப் பொதியே,அஞ்சுகமே
அஞ்சாமல் வாழ்ந்திடு!
அஞ்சி ஒதுக்கு ஆகாததை.
ரோஜாக் குவியலே-எங்கள்
ராஜா நீ !
Sunday, November 14, 2010
பணி
செய்யும் தொழில் ?
தெய்வமெனப் போற்றாவிடினும்
தெற்றினை அகற்றிடுவோம்
பற்றுக் கொள்வோம் பணி மீது.
எப்பணி ஏற்றிடினும்
அப்பணி அழகாக்கு
தப்பினி நேர்ந்திடாது
என எண்ணித் தயங்காது
காரியமாற்று.
தனித்தன்மையான பணி
தரணி போற்றும் பணியாகும்.
Monday, November 8, 2010
யார்?
வனமெனும் வண்ண உலகில்
வனப்பு மிகு மானைத் தோற்றி
சினம் கொண்ட சிங்கத்தையும்
சீறச் செய்தது யார் ?
கண் கவரும் காசினியில்
கனிவு மிகு நாயகர்களைத் தோற்றி
கனல் மிகு வில்லன்களையும்
விளையாட விட்டது யார்?
வித்தியாசமான பொம்மலாட்டத்தில்
விளையாட்டு பொம்மைகளாய் நாம் !
வனப்பு மிகு மானைத் தோற்றி
சினம் கொண்ட சிங்கத்தையும்
சீறச் செய்தது யார் ?
கண் கவரும் காசினியில்
கனிவு மிகு நாயகர்களைத் தோற்றி
கனல் மிகு வில்லன்களையும்
விளையாட விட்டது யார்?
வித்தியாசமான பொம்மலாட்டத்தில்
விளையாட்டு பொம்மைகளாய் நாம் !
Sunday, November 7, 2010
கடந்த நினைவு
நீல நயனங்களில் காணும்
நீண்ட கனவல்ல,
நிஜங்களின் பதிவு,
கடந்த நினைவு !
நினைவலைகள் நெஞ்சக்கடலில்
ஓய்வதுண்டோ?
மனக்கரையில் உரசிடும்
கடந்த நினைவு !
நெஞ்சப் பேழையில் நிதமும்
சுகம் தரும் நித்திலங்கள் !
நீண்ட கனவல்ல,
நிஜங்களின் பதிவு,
கடந்த நினைவு !
நினைவலைகள் நெஞ்சக்கடலில்
ஓய்வதுண்டோ?
மனக்கரையில் உரசிடும்
கடந்த நினைவு !
நெஞ்சப் பேழையில் நிதமும்
சுகம் தரும் நித்திலங்கள் !
உல்லாசம்
காட்டாறு போன்ற வாழ்விலே
கரை சேர உதவும் தோணி
கரடு முரடான வாழ்வினிலே
கசப்பு நீக்கும் மருந்து
கவிலயமான வாழ்வினிலே
களிப்பு கூட்டும் விருந்து
மருந்தாயினும்,விருந்தாயினும்
மட்டுக்குள்ளிருத்தலே உல்லாசம்.
கரை சேர உதவும் தோணி
கரடு முரடான வாழ்வினிலே
கசப்பு நீக்கும் மருந்து
கவிலயமான வாழ்வினிலே
களிப்பு கூட்டும் விருந்து
மருந்தாயினும்,விருந்தாயினும்
மட்டுக்குள்ளிருத்தலே உல்லாசம்.
Friday, November 5, 2010
தீப ஒளி
ஆற்றல் நிறை அக்கினியே!
ஆகாததை அழிப்பாயே,
ஆக்கந் தரும் அக்கினியே !
ஆக்கியும் உயிர் காப்பாயே.
ஆவதும் உன்னாலே,
அழிவதும் உன்னாலே,
அதனால்,நீ அக்னி மங்கையோ!
சக்தியின் வடிவே,
சஞ்சலம் போக்குவாய்!
சுடர் விடும் ஜோதியே
சுகமே ஆக்குவாய்!
ஆகாததை அழிப்பாயே,
ஆக்கந் தரும் அக்கினியே !
ஆக்கியும் உயிர் காப்பாயே.
ஆவதும் உன்னாலே,
அழிவதும் உன்னாலே,
அதனால்,நீ அக்னி மங்கையோ!
சக்தியின் வடிவே,
சஞ்சலம் போக்குவாய்!
சுடர் விடும் ஜோதியே
சுகமே ஆக்குவாய்!
Thursday, November 4, 2010
திருமலையில் திருவிழா
அம்மம்மா !ஆனந்தம்
அப்பப்பா ! பரவசம்
அழகுக் காட்சி!அதிசயக் காட்சி!
அதனைப் பருகிய கண்களே சாட்சி!
தேவலோகக் காட்சி கண்டேன்
மஞ்சள் தங்கங்களாய்
சோடியம் விளக்குகள்
மின்னும் வைரங்களாய்
வெள்ளொளி வெளிச்சங்கள்
மலை மீது முகில்கள் கூட்டம்
பிரதிபலித்ததே கண்ணாடியாய்
விண்மீன் கூட்டத்தை வீதியிலும்
வீதியின் வெளிச்சங்களை
விண்மீனின் கூட்டங்களுமாய்
கண்கள் பருகிய காட்சியை
அகத்திலும் நிறைத்ததாலே
ஆனந்தக் களிப்பு!
அப்பப்பா ! பரவசம்
அழகுக் காட்சி!அதிசயக் காட்சி!
அதனைப் பருகிய கண்களே சாட்சி!
தேவலோகக் காட்சி கண்டேன்
மஞ்சள் தங்கங்களாய்
சோடியம் விளக்குகள்
மின்னும் வைரங்களாய்
வெள்ளொளி வெளிச்சங்கள்
மலை மீது முகில்கள் கூட்டம்
பிரதிபலித்ததே கண்ணாடியாய்
விண்மீன் கூட்டத்தை வீதியிலும்
வீதியின் வெளிச்சங்களை
விண்மீனின் கூட்டங்களுமாய்
கண்கள் பருகிய காட்சியை
அகத்திலும் நிறைத்ததாலே
ஆனந்தக் களிப்பு!
Tuesday, November 2, 2010
வரம்
சின்னக் கை
சிங்காரக் கை
தத்தித் தத்தி வந்து தளிர்நடை
போட்டு வந்து எம் கரம்
பற்றினாய்!
இறைவன் வாழ்வில் தந்த
வரம்!
பிஞ்சுக் கைகளை நம்
பஞ்சு விரல் பற்றி
அழைத்துச் செல்வோம்
அழகான வாழ்வுக்குள்
அமைத்துத் தருவோம்
அன்பு ததும்பும் வாழ்வினை!
அற்புத உலகில் அமைக்கட்டும்
அன்பு சாம்ராஜ்யம்!
இறைவன் நமக்களித்த
வரத்திற்கு
வரமாய் மாறும் தவம் புரிவோம்!
ஈன்ற பொழுதினும்
பெரிதுவக்கட்டும்,
இவன் தாய்!
இவன் தந்தை எந் நோற்றான்?
இயம்பட்டும் இனிமையாய்
இவ்வுலகு!
Monday, November 1, 2010
நல்லார் ஒருவர் உளரேல்....
அருமையான நடவடிக்கை.அழகழகாய்த் திட்டங்கள்.கேட்கும் போதே செவியெல்லாம் குளிர்ந்து சிந்தை மலர்கிறது.
இந்தப் படத்தைப் போல் அவர் இதயமும் இமயமே! ஆம்,முப்பத்தேழு ஆண்டுகாலப் பணி ஆட்சியராக.இப்பொழுது ஆட்சி ,பள்ளிகளின் தரம் உயர்த்துவதிலே!
நேரடியாகச் சொன்னாலே எதுவும் நேராதது போலிருப்போரையே பார்த்துப் பழக்கப் பட்ட எங்களுக்கு சொல்லலாமா?வேண்டாமா?என யோசித்து,பக்கத்தில் சோல்லிக் கொண்டிருந்த விஷயம் கூட பட்டென்று பரீசீலிக்கப் பட்டது வியப்பையே ஏற்படுத்தியது.
" MORAL COURAGE" வார்த்தையே அதி அற்புதம்.ஆனால் நல்லவர்களாக இருப்பது கடினம் என்று தாங்கள் சொன்னதையே சொல்லி முடிக்கின்றேன்.
' வாழ்க வளமுடன்' விஜயகுமார் சார்!
Wednesday, October 27, 2010
இந்தியத் தாயின் இதயத்துடிப்பு
உந்தன்
லப் டப் கூட
பட் பட் எனப் படபடக்கிறதே
வெடிச் சத்தத்தால் வெகுண்டாயா?
வெருண்டாயா?
சிரைகளின் குருதி இதயத்தில்
பாய்கிறதோ?
சிறைகள் நிரம்புகிறதே?
தமனிகளின் இயக்கத்திலும்
தள்ளாட்டம்? அழுத்தம்
தாளாமல் தவிக்கின்றாயோ?
இந்தியத்தாயே! உன்
இதயத்தில் அமைதி
எப்போது உதயம்?
லப் டப் கூட
பட் பட் எனப் படபடக்கிறதே
வெடிச் சத்தத்தால் வெகுண்டாயா?
வெருண்டாயா?
சிரைகளின் குருதி இதயத்தில்
பாய்கிறதோ?
சிறைகள் நிரம்புகிறதே?
தமனிகளின் இயக்கத்திலும்
தள்ளாட்டம்? அழுத்தம்
தாளாமல் தவிக்கின்றாயோ?
இந்தியத்தாயே! உன்
இதயத்தில் அமைதி
எப்போது உதயம்?
விளையாட்டுத் துறை
இது
வெற்றுத் துறையல்ல,
வெற்றித் துறையே!
வீணர்களின் துறையல்ல,
இது
வீரர்களின் துறையே!
இந்த
விளையாட்டுக் களமென்ன
தேர்தல் களமா?
கண்டவர்களும் குதித்துவிட,
முயற்சியும் ,பயிற்சியோடு
முனைப்புடன் முயலும்
முழு வீச்சாளர்களின் களமிது
சாதனையாளர்கள் பலரும்
சோதனைகள் பல தாங்கி
சாதனைகள் செய்வோரே!
சாதிக்க முனைவோரும்
சஞ்சலம் கொள்ளாது
சரியாகப் பயிற்சி பெற்றால்
சாதனைப் பட்டியலிலே....
ஒலிம்பிக்
உலக விளையாட்டுத்துறை
அத்துணை நாடுகளின்
அழகழகான அணிவகுப்பு
தங்கம் எத்துணை?
வெள்ளி எத்துணை?
வெண்கலங்கள் தான்
எத்துணை?எத்துணை?
பலப்பல நாடுகளின்
பட்டியல் பார்த்தே
மலைத்துத் தான் போனோம்
மனதாரப் பாராட்டினோம்
ஐயகோ!
வெண்கலம் கூடப்
பெறாது
போயிருந்தால்-எம்
மண்ணின் நிலை?
வெட்டித் துறைதான் !
நம் பாரதத்தின் பயஸினால்
அட்லாண்டாவில் அடைந்ததை
சிட்னியிலும் தக்க வைத்தோம்-நம்
மண்ணின் மல்லீஸ்வரியால்
நூற்றிருபத்தெட்டாண்டு,
பின்
தங்கம் பெற்றோம்,ஆம்
தங்கம் பெற்றோம்!
அபிநவ் பிந்த்ரா !!
வெண்கலம் வென்ற சுசில்
வெற்றுத் துறைப்
பட்டியலில்
நாமும்!!
காமன் வெல்த் தங்கங்கள்
ஏராளம்!
தங்கங்களோடு ?
Tuesday, October 26, 2010
மொய்
இது மெய்யல்ல,
வெறும் பொய்!
வட்டியில்லாக் கடன்!!
வசதியைப் பொறுத்து
வட்டியுடனும் செலுத்தப்படும்.
மண(ன)முடன் தரும் மலருக்கு
மண்ணில் இணையுண்டோ?
கணக்கில்லாமல் தரும்
பொருளுக்கு
மனம் கணக்குப் போட்டிடுமே!
ஏதோ ஒரு நாள் தானே!
ஒரு சில மணித்துளி தானே!!
மனதார வாழ்த்துங்கள்,
மண விழாவினை!
பந்திக்குச் சென்று விட்டு
பணம் செலுத்துவதோடு சரியா?
மொய்யை மெய்யாக்குங்கள்!
பொய்யாக்கி,போஜனக் கட்டணம்
செலுத்தாதீர்கள்!
வெறும் பொய்!
வட்டியில்லாக் கடன்!!
வசதியைப் பொறுத்து
வட்டியுடனும் செலுத்தப்படும்.
மண(ன)முடன் தரும் மலருக்கு
மண்ணில் இணையுண்டோ?
கணக்கில்லாமல் தரும்
பொருளுக்கு
மனம் கணக்குப் போட்டிடுமே!
ஏதோ ஒரு நாள் தானே!
ஒரு சில மணித்துளி தானே!!
மனதார வாழ்த்துங்கள்,
மண விழாவினை!
பந்திக்குச் சென்று விட்டு
பணம் செலுத்துவதோடு சரியா?
மொய்யை மெய்யாக்குங்கள்!
பொய்யாக்கி,போஜனக் கட்டணம்
செலுத்தாதீர்கள்!
Subscribe to:
Posts (Atom)



























