உலக அரங்கில் தாயகத்தை
உயர்த்தி நிறுத்திய
உயரிய ஆத்மாவே,
உளத்தில் மட்டுமா?தவம்,
உணவில் தவம்,
உடையில் தவம்,
உறைவிடத்தில் தவம்
கள்ள நோட்டிலும் உந்தன்
கள்ளமில்லாச் சிரிப்பு!
அத்தனை பேரும் அறிந்த
அன்பான ஆத்மா!
அகில அளவிலே அன்னைபூமியை
அடையாளம் காட்டியது
அண்ணலின் அடிகள்.
வாழ்விலே தவம் செய்து
உயர்வோருண்டு,
தவமே வாழ்க்கையாய்
வாழ்ந்திட்ட மகானே!
கோணல் புத்திக்காரர்களையும்-அந்தக்
கோலால் தட்டி நேராக்கு.
இந்திய மண்ணில் நீரே மகாத்மா
ஆன்மீக ஆத்மாக்களே அறிவர்
இரமணரையும்,இராமலிங்கரையும்
உலகோர் அனைவரும் அறிந்த
நீரே மகாத்மா!
உயர்த்தி நிறுத்திய
உயரிய ஆத்மாவே,
உளத்தில் மட்டுமா?தவம்,
உணவில் தவம்,
உடையில் தவம்,
உறைவிடத்தில் தவம்
கள்ள நோட்டிலும் உந்தன்
கள்ளமில்லாச் சிரிப்பு!
அத்தனை பேரும் அறிந்த
அன்பான ஆத்மா!
அகில அளவிலே அன்னைபூமியை
அடையாளம் காட்டியது
அண்ணலின் அடிகள்.
வாழ்விலே தவம் செய்து
உயர்வோருண்டு,
தவமே வாழ்க்கையாய்
வாழ்ந்திட்ட மகானே!
கோணல் புத்திக்காரர்களையும்-அந்தக்
கோலால் தட்டி நேராக்கு.
இந்திய மண்ணில் நீரே மகாத்மா
ஆன்மீக ஆத்மாக்களே அறிவர்
இரமணரையும்,இராமலிங்கரையும்
உலகோர் அனைவரும் அறிந்த
நீரே மகாத்மா!
No comments:
Post a Comment