Thursday, April 28, 2011
Wednesday, April 27, 2011
Sunday, April 24, 2011
கல்வியின் சிறப்பு
பாடம் நல்லா படிக்க வேணும் சின்னக்கண்ணு
படிச்சு நாளும் உயர வேணும் செல்லக் கண்ணு
பள்ளிக் கூடம் கோயில் தானே சின்னக்கண்ணு
ஆசிரியர்கள் தெய்வங்களாம் செல்லக்கண்ணு
பண்பாலே நாளும் உயர சின்னக் கண்ணு
பக்குவமாய் நீயும் பழகு செல்லக் கண்ணு
எந்நாளும் நலம் பெறவே சின்னக் கண்ணு
ஏற்ற படிப்பை நீ படித்திடு செல்லக் கண்ணு
அன்பு தானே அரிச்சுவடி சின்னக் கண்ணு
அருமைக் கல்வி தானே அதையும் தரும்
செல்லக் கண்ணு
உயர் படிப்பு நீ படித்தால் சின்னக் கண்ணு
உலக நலமனைத்தும் பெற்றிடலாம்
செல்லக் கண்ணு!
Wednesday, April 20, 2011
Monday, April 11, 2011
மடலிடன் தொடர்ச்சி
அம்மாவை வணங்கி ஆசி பெற்றோம்-நம்
அன்புத் தோழி குறித்த அமுதமொழி
சொல்லுவோம்
அவரின் மனம் தனை வெல்லுவோம்
ஆம்,இவர்கள் நம்
அன்பான தோழி,அருமையான தோழி
இன்பம் தரு தோழி,ஈகை நிறைந்த தோழி
உயர்வான தோழி,ஊக்கம் தரு தோழி
பிருந்தாவனமெனும் நந்தவனத்திலே
திளைத்த நட்புமனம் இவருடையது
விக்டோரியா மகாராணியாய் தஞ்சம்
தந்த தங்க மனம் கொண்ட நட்புமுண்டு
அமிர்தமென சுவை தரும் அழ்ந்த
நட்பும் இவருக்குண்டு
சிலர் பேசினாலே
அகம் தளரும்,இவருடன் பேசினாலோ
அகம் மலரும்-நம் அகம் மலர்த்தும்
அரிய பணியை அழகாய்ச் செய்தார்
இன்பமாய் இருந்திடல் வேண்டும்
இனிமையோடு பழகிடல் வேண்டும்
வள்ளுவரின் வாய்மொழியான
''கனியிருப்பக் காய் கவர்ந்தற்று''இது
உந்தன் அமுதமொழியல்லவா?
உங்கள் மொழிகள் எங்கள் பலரின்
மனப் புண்ணுக்கு மருந்து
தங்களின் ஞானமொழி சிலரின்
அகக் கண்ணுக்கு மருந்து
இனிமை விரும்பும் இவரின் மனம்
என்றும் இளமைதான்
மனதாலே என்றும்
மார்க்கண்டேயராக இருக்கும்
உங்களுக்குக் காலம்
கொடுக்கிறது கட்டாய ஓய்வு
ஞானத்தால் நற்குடும்பம் அமைத்தீர்
பொறுமையினால் உயர் பரிசு பெற்றீர்
உங்கள் ஓய்வுக்காலம் சிறப்புற
வாழ்வு வளமுற,யாவும் நலமுற
எங்கள் பரம தகப்பனே அவர்களுக்கு
அருள் தாரும்!
பிரிவுபசார மடல்
துணையது வாய்வருந்தூய நற்சோதி
துணையது வாய்வருந்தூய நற்சொல்லாந்
துணையது வாய்வருந்தூய நற்கந்தம்
துணையது வாய்வருந்தூய நற்கல்வியே-
திருமந்திரம் தனைச் சொல்லி
தூய நற்கவிதை சொல்லிடுவோம்.
எம் பள்ளி தமிழாசிரியர் சந்திரா
அவர்களுக்கு,
தேய்ந்து வளரும் தன்மை
வான் நிலவுக்கு உண்டு
தமிழ் நிலவே,
தேய்வென்பதே இல்லை எனும்போது
ஓய்வென்பது எதற்கு?ஆம்
உந்தன் பணிக்கல்ல ஓய்வு,
அகவையின் அதிகத்தால் மட்டுமே.
விடுப்பை வீண் செய்ய விரும்புவோமா?
விருப்பத்தோடு விடுப்பைக் கூட
வீணாக்கியவருக்குக் காலம் மட்டுமே
கொடுக்கிறது கட்டாய ஓய்வு!
என்றைக்கோ படித்த மாணவியும்
இன்றைக்கும் ஓடிவருவாள்
அம்மாவென்று!(தமிழ்ப் பரிசு)
அவர்களுக்கு மட்டுமல்ல
இங்குள்ளோர் அத்துணை பேருக்கும்
அம்மா,அன்பான அம்மா!
பண்பான அம்மா!
நட்பிற்கோர் நல்லிலக்கணம்
வகுத்து விட்டுச் செல்கின்றீர்-இது
குழு நடவடிக்கையாய்க் கூட
இருந்து விட்டுப் போகட்டுமே-அதனால்
குழப்பமென்ன?
அன்பு பகிரும் அகங்கள்
குழுமிக் குதூகலித்தல்
இயல்பு தானே?
அருமையாய்ப் பணி செய்தீர்
ஆற்றலோடு பணி செய்தீர்
இன்பமொடு பணி புரிந்தீர்
ஈகையொடு நலம் செய்தீர்
உவகையொடு பணி செய்தீர்
- ஊக்கமொடு பணி புரிந்தீர்
எந்நாளும் பணி செய்தீர்
ஏற்றமொடு பணி செய்தீர்
ஐயம் நீக்கும் தொழில் செய்தீர்
ஒற்றுமையோடு இயைந்து
ஓங்கிய வாழ்வு நீவிர் பெற
ஔடதமில்லா வாழ்வு பெற்று
உயர் வாழ்வு வாழ
இறையின் பேராலே
வாழ்த்துகிறோம்!
Thursday, April 7, 2011
Wednesday, April 6, 2011
Tuesday, April 5, 2011
Monday, April 4, 2011
Friday, April 1, 2011
பிரிவுபசாரம்
மோகனத்தில் தொடங்கி
முகாரியில் முடிந்திடும்
முற்றிலும் வித்தியாசமான
சங்கீதக் கச்சேரி !
இங்கு,
பார்வையாளர்களே
பாடகர்களாய் !
வித்துவான் பார்வையாளராய்!
விழாக் கதாநாயகனாய் !
விதவிதமான ஆலாபனை
ஆரோக,அவரோகணங்களும்!
கச்சேரியில்
ஆரோகணத்தின் அளவு
அதிகமாய் இருக்கும்
அவரோகணம் சற்று
அடக்கி வாசிக்கப்படும்
இக் கச்சேரியில்,
வசை பாடுதல் மறைக்கப்பட்டு
வாழ்த்திலே தொடங்கி
மங்களத்திலே முடியும்
வழக்கமான கச்சேரி!
Tuesday, March 29, 2011
ஐம்பது
ஆடி அடங்கும் வாழ்வினிலே-பண்
பாடி முடித்திட்ட பாதி நிலை
இன்பமும்,துன்பமும் ஐம்பதைம்பதாய்ப்
பார்த்து அனுபவம் சேர்த்த அபூர்வநிலை
முன்நிலை நினைத்து மனம் ஏங்கும்
பின்நிலை நினைத்து பயம் வாங்கும்
செக்குமாடு வாழ்வானாலும் தேசம் பல
சென்று கண்ட வாழ்வேயாயினும்
சேகரித்த அனுபவம்
சிந்தையிலே பல கோடி
மலரும் நினைவுகளிலே
மனம் மூழ்கிடினும்
மரண பயமும் எட்டிப் பார்க்கும்
கலக்கம் கழற்றி வாழும்
கலையினால் என்றும்
களிப்பே!
ஔடதம்
மழலையின் மயக்குமொழி
மாதாவுக்கு மருந்து
மனைவியின் மந்திரமொழி
மணாளனுக்கு மருந்து
தாயின் பரிவுமொழியே
தவிப்புக்கு மருந்து
தந்தையின் தரம்நிறை வழியே
தரணியில் உயர்ந்திட மருந்து
குருவின் வழி காட்டலே
கும்பிட்டு ஏற்றிடும் மருந்து
தெய்வத்தின் திருவடியே
தேவையான அருமருந்து
மருந்தினை அருந்தினால்
பெருந்துயர் போகும்
விருந்தாகும் வாழ்வே !!
Sunday, March 27, 2011
மாய வாழ்வு
மாதாவின் மடி தோன்றி
மண்ணிலே மறைந்திடும்
மாயவாழ்வு இடையில்
மறந்து போவதேனோ?
கருவிலே உருவாகி
காலனின் காலடியே
கடைசியில்,என்பதுவும்
கரைந்து போவதேனோ?
காற்றாகி ,கனலாகி
ஊற்றாகிப் பரிணமிக்கும்
இயற்கையின் உன்னதம்
இடையில் உறைந்து போவதேனோ?
எங்கும் நானே,எதிலும் நானே
என எக்காளமிடுவதேனோ?
மாறட்டும்,மறையட்டும்
மறந்திடட்டும் மாயவாழ்வு!
Saturday, March 26, 2011
Friday, March 25, 2011
Subscribe to:
Posts (Atom)








































