Friday, March 25, 2011
Thursday, March 24, 2011
Wednesday, March 23, 2011
Tuesday, March 22, 2011
பங்கு
உலகமெனும் நாடகமேடையில்
எல்லோருக்கும் பங்கு
நாயக நாயகியர்களாய்
நலமிகுந்த தம்பதியர் பங்கு
மகிழ்வூட்டும் பாத்திரமாய்
மழலையர் பங்கு
அச்சமூட்டும் வில்லன்களாய்
அரசியல்வாதியின் பங்கு
நடிப்பிலொரு நடிப்பாய்
நடிகர்களின் பங்கு
நகைச்சுவைப் பாத்திரங்களாய்
பைத்தியங்களின் பங்கு-இங்கு
நல்லது செய்திட எண்ணுவோரெல்லாம்
நகைச்சுவை நாயகர்களாய் !
எல்லோருக்கும் பங்கு
நாயக நாயகியர்களாய்
நலமிகுந்த தம்பதியர் பங்கு
மகிழ்வூட்டும் பாத்திரமாய்
மழலையர் பங்கு
அச்சமூட்டும் வில்லன்களாய்
அரசியல்வாதியின் பங்கு
நடிப்பிலொரு நடிப்பாய்
நடிகர்களின் பங்கு
நகைச்சுவைப் பாத்திரங்களாய்
பைத்தியங்களின் பங்கு-இங்கு
நல்லது செய்திட எண்ணுவோரெல்லாம்
நகைச்சுவை நாயகர்களாய் !
Friday, March 18, 2011
தடம்
அறிவு பூர்வமாக கவி பல
ஆக்கிட ஆசையுண்டு
இலக்கிய நயமொடு கவிபல
இயற்றிட இச்சையுண்டு
சொல்வளத்துடனே கவிபல
சொல்லிடும் எண்ணமுண்டு
செம்மையுறு கவிதை சொல
சொல் வளமுமில்லை
இனிமையுறு கவிதை இயம்ப
இலக்கண அறிவுமில்லை
அறிவுறு கவிதை ஆக்கும்
ஆற்றலும் எமக்கில்லை
அனுபவம் மட்டிலுமே
கவிதை சொல்லிடும்
ஆவலைத் தூண்டிடுதே!
தங்கக் கவிப்பாதையின்
தடம் செல்லாவிடினும்
தரிசனம் மட்டும் போதும்!!
Friday, March 11, 2011
Saturday, March 5, 2011
Thursday, March 3, 2011
மின்னல்
கார்முகில் உனைப்
பிரசவிக்கு முன்பு வலியால்
கத்துகிறதோ,
இடியாய்!
கருமுகிற் கூட்டமிரண்டு
கலந்திட்டுப் பிறந்திட்ட
வெண்மைக் குழவியே!
தோன்றிய உடனேயே
தொலைந்திட்டாலுங் கூட
தொல்லைக்குள்ளாக்குகிறாயே !
உன்னெழில் காண விழைந்தால்
கண்ணில் என்றுமே இருள் !
வானத்தில் உன் வெட்டெனில்
பூமியிலும் மின் வெட்டு !
எங்கும் இருள்!
இருளைக் கிழித்து வந்து
இதம் தரும் மழையின்
இனிய அறிவிப்பென்பதால்
இன்பம் உன்னாலே!
Tuesday, March 1, 2011
Saturday, February 26, 2011
கம்பீரம்
காட்டுக்குக் கம்பீரம்
காட்டரசன் கர்ஜனை
நாட்டுக்குக் கம்பீரம்
நல்லதொரு ஆட்சி
வீட்டுக்குக் கம்பீரம்
விளக்கேற்ற வந்தவளாலே
வந்தவளின் பெருமிதம்
வாய்த்தவளின் கம்பீரத்தாலே!
வாய்த்தவனின் கம்பீரம்
வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பதாலே!
வளமான வாழ்க்கையே
சமுதாயத்தின் கம்பீரம்
சமுதாயச் செழிப்பே
நாட்டுக்குக் கம்பீரம்
ஔவை சொன்ன குடிஉயரக்
கோன் உயர்தல் போலே
ஒன்றன் கம்பீரம்தான்
மற்றதற்கு அடித்தளம்
அடித்தள பலத்தால்
அ.ழகான இல்லமமையும்
அழகிய இல்லத்தின் தேவை
அன்பான உள்ளமே!
Subscribe to:
Posts (Atom)
















































