Saturday, March 5, 2011
Thursday, March 3, 2011
மின்னல்
கார்முகில் உனைப்
பிரசவிக்கு முன்பு வலியால்
கத்துகிறதோ,
இடியாய்!
கருமுகிற் கூட்டமிரண்டு
கலந்திட்டுப் பிறந்திட்ட
வெண்மைக் குழவியே!
தோன்றிய உடனேயே
தொலைந்திட்டாலுங் கூட
தொல்லைக்குள்ளாக்குகிறாயே !
உன்னெழில் காண விழைந்தால்
கண்ணில் என்றுமே இருள் !
வானத்தில் உன் வெட்டெனில்
பூமியிலும் மின் வெட்டு !
எங்கும் இருள்!
இருளைக் கிழித்து வந்து
இதம் தரும் மழையின்
இனிய அறிவிப்பென்பதால்
இன்பம் உன்னாலே!
Tuesday, March 1, 2011
Saturday, February 26, 2011
கம்பீரம்
காட்டுக்குக் கம்பீரம்
காட்டரசன் கர்ஜனை
நாட்டுக்குக் கம்பீரம்
நல்லதொரு ஆட்சி
வீட்டுக்குக் கம்பீரம்
விளக்கேற்ற வந்தவளாலே
வந்தவளின் பெருமிதம்
வாய்த்தவளின் கம்பீரத்தாலே!
வாய்த்தவனின் கம்பீரம்
வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பதாலே!
வளமான வாழ்க்கையே
சமுதாயத்தின் கம்பீரம்
சமுதாயச் செழிப்பே
நாட்டுக்குக் கம்பீரம்
ஔவை சொன்ன குடிஉயரக்
கோன் உயர்தல் போலே
ஒன்றன் கம்பீரம்தான்
மற்றதற்கு அடித்தளம்
அடித்தள பலத்தால்
அ.ழகான இல்லமமையும்
அழகிய இல்லத்தின் தேவை
அன்பான உள்ளமே!
Tuesday, February 15, 2011
சமுதாயம்
சமுதாயச் சந்தையிலே
நாளுக்கொரு வழக்கு
ஆளுக்கொரு நீதி
காட்டுத் தீயாய் சில சேதி
கணக்கற்றோரைப் பொசுக்கும்
நாட்டில் நலமும் தரும்
அத்தி பூத்தாற் போல
போதி மரத்தடி மகான்களாக
மாற வேண்டாம்
குழாயடிச் சண்டையிடும்
குதர்க்கவாதிகளாகாதீர்
சமுதாயச் சந்தையிலே
விஞ்ஞான விந்தையிலே
விழுந்திட்டாலும்
விலையாகாதீர்
புடம் போட்ட மனதிலே
படம் போட்டுப் பார்த்து
வடம் இட்டிழுப்பீர் மனதை
வளமான பாதைக்கு
மெய்ஞானத்திலே தோய்வு-வாழ்வில்
மேடேறும் வாய்ப்பு!
நாளுக்கொரு வழக்கு
ஆளுக்கொரு நீதி
காட்டுத் தீயாய் சில சேதி
கணக்கற்றோரைப் பொசுக்கும்
நாட்டில் நலமும் தரும்
அத்தி பூத்தாற் போல
போதி மரத்தடி மகான்களாக
மாற வேண்டாம்
குழாயடிச் சண்டையிடும்
குதர்க்கவாதிகளாகாதீர்
சமுதாயச் சந்தையிலே
விஞ்ஞான விந்தையிலே
விழுந்திட்டாலும்
விலையாகாதீர்
புடம் போட்ட மனதிலே
படம் போட்டுப் பார்த்து
வடம் இட்டிழுப்பீர் மனதை
வளமான பாதைக்கு
மெய்ஞானத்திலே தோய்வு-வாழ்வில்
மேடேறும் வாய்ப்பு!
Thursday, February 10, 2011
உயர் முயற்சி
உம்மையறிந்தவர் உரையாதிருப்பாரோ
மாந்தரே -உயர்
தன்மையோடு புரியும் நற்செயல்
புகழாதிருப்பாரோ-மாந்தரே
எத்தனை ஆயிரம் திட்டங்கள் தீட்டினும்
மாந்தரே -அத்தனை
திட்டமும் சட்டமெனச் செல்லுமா
மாந்தரே
ஆழியிலுள்ள சிப்பியின் முத்தாய்
மாந்தரே -அனைத்துமே
ஆகுவதுண்டோ மாந்தரே
பாழாய்ப்போன சிப்பியையும் தான்
மாந்தரே -பக்குவமாய்
கலைப்பொருள் செய்வாரே மாந்தரே
ஆங்கிலப் பயிற்சி அவசியமென்றாலும்
மாந்தரே -ஆற்றல்
அத்துணை பேருக்கும் ஒன்றாயிருக்குமோ
மாந்தரே
எல்லோரையுமேற்றும் எண்ணமென்றுமுண்டு
மாந்தரே -என்றாலும்
கரமொன்றின் விரல்களைந்தும்
ஒன்றாயிருத்தல் கூடுமோ?
உந்தன் முயற்சி உயர்ந்த முயற்சியே
மாந்தரே -விதை ஒன்று பழுதானால்
உழவனை நிந்தித்தல் நியாயமோ?
பட்டபாட்டிற்கான பலன் வேண்டாம்
என்பரோ மாந்தரே -பதர் ஒன்று
இருந்தால் பயிர் எல்லாம் பதர் எனல்
நியாயமோ?
Friday, February 4, 2011
முட்டாள் கூட்டம்
முட்டாள்களின் தேசத்தில்
முட்டுக்கட்டை என்பதிருக்கும்
அறிவிலிகள் கூட்டத்தில்
அட்டூழியம் என்பதிருக்கும்
மூர்க்கர்களின் இடத்திலே
முறைப்பு தவிர வேறேதுண்டு?
மட்டமான மனிதர்களிடம்
மரியாதை எதிர்பார்த்தல் முறையோ?
அட்டகாசம் செய்யும்
ஆணவக்காரர்களை
ஆண்டவனிடம் விட்டுவிடு.
ஆண்டொன்று போனால் வயதொன்று
போகிறது,
வஞ்சனை மட்டும் போகாதோ?
வீணர்களின் நெஞ்சில்
விஷமிருப்பதால்,
விபரீதம் நாம் காண்பது தகுமா?
சிந்தனையும்,சிரிப்பும்
சிறு வயதிலேயே
சீறும் பார்வையா?
சீரிய பார்வையா?
சிந்தனையின் சிகரமாய்
நீ இருந்தாலும்
சிரித்து மகிழும் இளநகையே
அழகு !
அறிவுப் பார்வை உனதாயிருக்கலாம்
அழிவு போக்கும்,அன்பு தேக்கும்
ஆன்மச் சிரிப்பு அழகல்லவா?
சிறு நகை அழகு
குறு நகை அழகு
புன்னகை அழகு
பூஞ்சிரிப்பு அழகு
சிந்தனையோடு சேர்ந்த
சிரிப்பென்பது
அழகோ அழகு!
Thursday, February 3, 2011
பிணி
அங்கம் முழுதும்
அரற்றி அழுகிறது
ஆற்றாமையினால்
அலறித் துடிக்கிறது
தங்கத்தால் பூட்டியங்கத்தைத்
தாங்கவே செய்தாலும்
தாளாத துயர் தந்து
தவிக்க வைக்கும் பிணியே
அணிமணிகள் பூட்டியே
அழகு பல செய்தாலும்
பிணியே நீ வந்திட்டால்
பெருந்துயர் தான் சேராதோ?
சோம்பல் நோய்தான்
சூழ்ந்து கொண்டால்
சோகமே சேர்ந்திடுமே-வாழ்வின்
வேகமே போய்விடுமே!
உல்லாசம் கண்டிடவே
உட்கார்ந்தே பணி செய்தால்
பிணிதான் சூழ்ந்திடுமே
உழைப்பு என்னும்
உயர் மருந்தால்
உற்ற பிணி தீர்த்திடலாம்
உல்லாசமாய் வாழ்ந்திடலாம்!
வண்ண,வண்ண மாத்திரையால்
வாழ்வு வண்ணம் இழந்ததென்னே?
வகைவகையான மருந்துகளால்
வளம் தான் போனதென்னே?
வளம் கண்டிடுவோமா?
வலிமை பெற்றிடுவோமா?
வறட்சி நிலை விடுத்து
வனப்பான வாழ்வு கிட்டுமா?
அரற்றி அழுகிறது
ஆற்றாமையினால்
அலறித் துடிக்கிறது
தங்கத்தால் பூட்டியங்கத்தைத்
தாங்கவே செய்தாலும்
தாளாத துயர் தந்து
தவிக்க வைக்கும் பிணியே
அணிமணிகள் பூட்டியே
அழகு பல செய்தாலும்
பிணியே நீ வந்திட்டால்
பெருந்துயர் தான் சேராதோ?
சோம்பல் நோய்தான்
சூழ்ந்து கொண்டால்
சோகமே சேர்ந்திடுமே-வாழ்வின்
வேகமே போய்விடுமே!
உல்லாசம் கண்டிடவே
உட்கார்ந்தே பணி செய்தால்
பிணிதான் சூழ்ந்திடுமே
உழைப்பு என்னும்
உயர் மருந்தால்
உற்ற பிணி தீர்த்திடலாம்
உல்லாசமாய் வாழ்ந்திடலாம்!
வண்ண,வண்ண மாத்திரையால்
வாழ்வு வண்ணம் இழந்ததென்னே?
வகைவகையான மருந்துகளால்
வளம் தான் போனதென்னே?
வளம் கண்டிடுவோமா?
வலிமை பெற்றிடுவோமா?
வறட்சி நிலை விடுத்து
வனப்பான வாழ்வு கிட்டுமா?
Subscribe to:
Posts (Atom)

















































