Friday, July 30, 2010

குழப்பம்

தேர்வு  எழுதிடச்
செல்ல வேண்டும்
மனித உணர்வு
தேறாத இடத்தில்

                படித்த்தைத் தாளில்
                இறக்க வேண்டும்
                மடிந்த்து  மயானத்தில்
                இறங்கிக் கொண்டிருக்கிறது

கலைமகளின் அருளுக்காக
திருமகளையும் விலையாக்கி
கழகங்களின் கலகங்களால்
இருமகளும் இழப்பு

                          காகிதம்  கனமாக்குவதைத் தவிர
                         கவிஞனால் என்ன செய்ய  முடியும்?
                         அறிக்கை விட மட்டுமே முடியும்
                          அரசியல்வாதிகளால்!

பத்திரிகைகளுக்கு வெறும்
தலைப்புச் செய்திகளாய்!
கலக்கத்தின் உச்சத்தில்
காவலும் கூட!

                          எண்ணி எண்ணித் தவிப்பது
                         தவிர ஏதும் செய்ய  இயலாதோராய்
                        பொதுஜனங்கள்!
                         தீர்வு?
               ( தேர்வு  நேரத்தில் நடந்த  கலவரத்தின் போது எழுதியது)

Wednesday, July 28, 2010

கரை சேரா வைகை நதி

பாரம் சுமந்திடவே
 பாலத்தின் அடியினிலே
பதுங்கிக் கிடந்திடும்
பக்குவம் பெற்ற ஆறு

  

அணையின் கட்டினிலே
அடங்கிக் கிடந்திட்டு
அகத்தை அடக்கிடும்
அனுபவம் பெற்ற ஆறு

காசில்லாக் காரணத்தால்
காலங்கள் கடந்திடினும்
கரையைச் சேர்ந்திடாது
காத்திருக்கும் கன்னி ஆறு

கரை  சேராமலிருப்பது
வைகை மட்டுமல்ல
வாழ்வு  தேடும் பல
வாலிப உள்ளங்களும்!