Monday, June 28, 2010

அபரிமிதமான செல்வம்

யார் முன்னுக்கு வர முயன்றாலும் அவர்கட்கு சமூகம் எல்லா வசதிகளையும் வாரி வழங்குவது இன்றைய இந்தியாவில் உள்ள புதியநிலை.கடலோரம் உள்ள வெறும் மணல் உதவாது,பயிரிட நினைக்க முடியாத நிலப்பரப்பில் தொழில் நிறுவனம் வந்தவுடன் ஆயிரம் ரூபாய்க்கு விற்க முடியாத நிலத்திற்கு லட்ச ரூபாய் விலை வருகிறது.அதுவே ஆரம்பம்.முடிவைநினைப்பதற்கு இல்லை. பணத்தைப் பொறுத்த வரையில் சமூகம் வளர்ந்து பணம் காய்க்கும் மரமாகிவிட்டது.எதற்குப் பஞ்சம் வந்தாலும் இனி பணத்திற்கு பஞ்சம் இல்லை
மனித மனம் திறம் வாய்ந்த்து.அவனுள் ஆயிரம் திறமைகள் மறைந்துள்ளன.அவன் அவற்றை அறிய வேண்டும்.தன் திறமைகளை வெளிக்கொணர அறிவுடை முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.அப்படிச் செய்தால் அளவு கடந்த செல்வத்தை அவனால் அபரிமிதமாக உற்பத்தி செய்ய முடியும்.
1.பணம் உப்படி உற்பத்தியாயிற்று?பணம் என்றால் என்ன?சமூகத்திற்கு இதுவரை பணத்தால் ஏற்பட்ட சௌகரியங்கள் எவை?பணத்தின் திறன் என்ன?இதுவரை பணம் எப்படிப் பெருகி வந்த்து?என்பவற்றை விவரமாக அறிதல் அவசியம்.இது ஞானம்.
2.ஞானத்தைப் பொருளாக மாற்ற வேண்டும்
3.ஞானத்தை சக்தியால் நிரப்ப வேண்டும்.
4.பணம் அபரிமிதமாகப் பெருகும் என்ற உண்மையை இத்திட்டத்தில் அனுபவமாக காண வேண்டும்.
5.சொந்தமாக ஒரு நல்ல காரியத்தைச் செய்து முழுப் பலன் பெற வேண்டும்.

தவத்திரு.கர்மயோகி அவர்களின் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

Sunday, June 27, 2010

எழுச்சி

ஏ மனிதா!எழுந்திரு
ஏக்கத்தை மூட்டை கட்டு
ஏற்றத்தை நிலை நாட்டு
கல்லாமை இருள் நீக்கு
கல்வி ஒளி எங்கும் ஏற்று
சோம்பலைத் தூக்கிப் போடு
சோகமும் ஓடிப் போகும்
சுகமும் தானே வந்து சேரும்

ஏ மனிதா! எழுந்திரு
நீ வளம் பெறு,மன நலம் பெறு
நாடு நலம் பெறும்-என்றும்
வளம் பெறும்!

துயருறும் தாயகத்தை நீ
தூக்கி நிறுத்த வேண்டாம்-உனைத்
தூக்கி நிறுத்த ஆள் தேடாதே!
சோர்ந்து கிடக்கும் நாட்டின்
சோர்வு போக்கிட வேண்டாம்-நீ
சோம்பிக் கிடக்காதே!

சோகங்களைக் காணப் பயந்து
சோதனையில் அல்லவா சிக்கிக் கொண்டாய்?
சோகம் கடந்த பின்னே வரும்
சுகங்களையுமல்லவா காணாது ஒளி(ழி)ந்தாய்

வெளியே வா!விரைந்து வா!
ஏ இளைஞனே! துடிப்போடு செயல்படு
துயர் துடைக்கப்படும்
வக்கிர மனம் விலக்கிடு
வச்சிர மனம் பெற்றிடு
வளமான வாழ்வு வாழ்வாய்
எண்ணங்களை உயர்த்து,ஏற்றம் பெற்றிடுவாய்

முயன்று உழைத்திடு,முன்னால் வந்திடுவாய்
உன்னால் முடியும்.....!
எழுந்து வா! செயல்பட விரைந்து வா!!

செம்மொழியான தமிழ்மொழி

ஊர் கூடி இழுத்த தமிழ்ப்பூந்தேர்
கொங்கு மண்டலம் முழுதுவதும்
மணம் பரப்பியது-இது
குவலயம் எங்கும் தொடர்ந்து மணக்கும்

எட்டுத் திக்கும் சென்று வந்த தமிழர்கள்
கொண்டு வந்த கலைச்செல்வங்களால்
தமிழன்னை வளமும்,நலமும் பெற்றாள்
செம்மொழி பாரெங்கும் பவனி வருகிறது

மாநாடு கண்டு மலைப்பு
அரங்கு கண்டு வியப்பு-அனைத்தும்
காண முடியாமல் தவிப்பு-இணைய
மாநாடு கண்டது பூரிப்பு

கவியரங்கமும்,பட்டிமண்டபமும்,சொற்பொழிவும்
சிந்தையெல்லாம் குளிர்ந்து போனது
உலகோர் போற்றிய உன்னத தமிழே
உயர்வாய் உலகோர் உய்யவே!
வாழ்வாய் யாம் வாழவே!