பொங்குக பொங்கல்
தங்குக மங்கலம்
நாடு முழுவதும் சங்கராந்தி
மங்கலம் தந்திடும் மனசாந்தி
இயந்திர வாழ்வின் இயக்கத்திலே
இனிமை சேர்த்திடும் இனிய விழா
இயற்கையை வணங்கிடும்
இன்ப விழா!
இருளை நீக்கி ஒளியை ஏற்றும்
இரவியின் கதிரைப் போற்றும் விழா!
இனிமை பொங்குக!
வளமை தங்குக!