சுற்றும் பூமி சுழலும் தன்மை
விதியின் வழி
சுத்த பூமி ரத்த பூமியாவது
மதியின் பழி
இயற்கை அன்னை இயக்கங் கொள்வது
விதியின் வழி
இணக்க பூமி இன்னல் உறுவது
மதியின் பழி
பால் வெளி இயக்கம் பாங்காய் நடப்பது
விதியின் வழி
பாங்கான இயக்கம் பாழாய்ப் போவது
மதியின் பழி
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று
விதியின் வழி
சொல்வது ஒன்று செய்வது ஒன்று
மதியின் பழி
விதியின் வழியே வாழ்வென்றாலும்
விளையும் இன்பம் மதியின் வழி
சொல்லும் செயலும் ஒன்றென்றானால்
நீங்கிப் போகும் மதியின் பழி