Monday, December 20, 2010

தன்னை அறிதல்

                          ''உன்னை அறிந்தால் நீ
                            உன்னை அறிந்தால்
                            உலகத்தில் போராடலாம்''
தன்னை அறிதலே சீரிய நெறிமுறையில் வாழ்வதற்கான சிறப்பான வழி.
கண்ணதாசனின் உயரிய வரிகள்.
                                   ''திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
                                     திருட்டை ஒழிக்க முடியாது''
என்ற பட்டுக்கோட்டையின் வரிகள் திருட்டுக்கு மட்டுமல்ல,ஒவ்வொரு செயலுக்குமே!
                                    ''குடி உயரக் கோன் உயரும்''
ஔவைப் பிராட்டி சொன்னது.உயரிய சமுதாயம் படைக்க வேண்டுமானால் தனி மனித ஒழுங்கு வேண்டும்.ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே உணர்ந்து,சரி செய்து கொண்டாலே சமுதாயம் திருந்தும்.கண்ணதாசன் இதனை,
                                             ''தன்னைத் தானும் அறிந்து கொண்டு
                                               ஊருக்கும் சொல்பவர்கள்
                                               தலைவர்கள் ஆவதில்லையா?
என்கிறார்.