Thursday, February 6, 2014

வாசிப்பு மடலல்ல,நேசிப்பு மடல்

இது வெறும் வாசிப்பு அல்ல,

மனதின் நேசிப்பு.

இது முகஸ்துதி அல்ல.

எந்தன் அக, துதி.

வாழ்வில் சிலர் நண்பர்களாயிருக்கலாம்,

சிலர் நல்வழிகாட்டலாம்,

சிலர் அறிவுரை கூறலாம்.

எந்தன் FRIEND ,PHILOSOPHER,GUIDE

நீங்களே.

பழகிய காலம் சிறிதாயினும்
,
பல்வேறு தருணங்களிலும்

பக்கபலமாய் இருந்தது –இவரின்

பண்பான  வார்த்தைகள்.

நல்லதொரு குடும்பச்சூழல் தந்த

நனி நாகரீகமான சொற்களை அமைத்து

அணிந்துரை தந்தீர்கள் என் வரிகளுக்கு,

என் வரிகள் அணி செய்து,அலங்கரிக்கட்டும்,

உந்தன் இரண்டாம் வசந்த காலத்திற்கு,


ஒய்வா? பணிநிறைவா? யார் சொன்னது?

கரைந்து கரைந்து கணிதம் சொன்ன வகுப்பறை

ஆர்வம் நிறைந்து ஆங்கிலம் சொன்ன வகுப்பறை

பாங்கான பதவி உயர்வுக்கு

வாழ்த்தி வழியனுப்பிய தருணங்கள்
,
இதற்கு மட்டுமே காலம் தந்திருக்கும்

கட்டாய ஒய்வு,

நீவீர் இழந்திருப்பது

ஒரு பூங்காவை மட்டுமே,

வாங்கியிருப்பதோ வான மண்டலம்.

வாழ்வு பிழிந்து பொருள் எடுங்கள்,

வானம் பிழிந்து மை எடுங்கள்.

நீளாயுள்,நிறை செல்வம்,உயர் புகழ்

மெய்ஞானம் பெற்று வாழ

இறைநிலையைப் பிரார்த்திக்கிறேன். 

                            நன்றி ; ( கவிப் பேரரசு )