Saturday, August 7, 2010

மெழுகுவர்த்தி ஏன் அழுகிறது?

                                  மெழுகுவர்த்தியே !நீ
                                  அழுவதற்கென்றே
                                  அவதரித்தவளோ?

                                  மின்சாரத்தின்  தேவை
                                  கட்டாயமாகிப்  போன
                                 காலத்தில்   கணக்கற்ற முறை
                                 நிகழும்  மின்வெட்டு  கண்டு
                                கலங்கி  நீ  அழுகின்றாயோ?

                                நடிகையின்  வீட்டு
                                பிறந்த நாள்  கொண்டாட்டத்தில்
                                ஒய்யார  மேடையில்  உட்கார்ந்து
                                உருகி  உருகி  அழுதிடுவது
                                உன்  மேடை  சிதறுவதாலா?அப்
                               பெண்  வயது  கண்டு  பதறுவதாலா?

                               மாதாவின்  மலர்ப் பாதங்களில்
                              மருகி  நீ   அழுதிடுவது
                              மாய  மண்ணுலகில்  காணும்
                              மயக்க  நிலை   எண்ணியோ?

சுடாத சூரியன்

                                         வேரிலேயே    வெந்நீர்
                                         ஊற்றும்   வீணர்களே!
                                        தாங்குவாள்   என்பதற்காக
                                        நில மகளையும்  நிந்திக்கும்
                                         நீசர்களே!

                                        பூவுக்கும்  தீ வைக்கும்
                                        புல்லர்களே!
                                          அக்கினியைக்   கூட
                                       அலைக்கழித்துப்  பார்க்கும்
                                       அரக்கர்களே!

                                     பழக்கத்தின்   காரணமாக
                                     பழித்துத்   திரியும்
                                     பாமரன்கள்  பலருண்டு
                                    படித்து   வந்த  பின்பும்
                                    பண்பட்ட  மனம்வேண்டாம்

                                   பண்பற்று     இருத்தல்
                                   பாவச்சுமை   சேர்க்கும்
                                    பண்பற்றுப்  பழிக்கும்
                                    பாதகர்க்குப்  பதிலுரைப்பதில்
                                    பயனில்லை,பயனே  இல்லை
                               
                                   பெண்ணே!நீ
                                   ஆகாயச்  சூரியன்
                                   குரைக்கிறது  தெரு  நாய்கள்!

Friday, August 6, 2010

எல்லையில்லாப் பெருவெளி

எல்லை  கட்டிவிட்ட மனம்
ஏற்றம் பெற்றிடுமா?
தொல்லை தொலைந்திடுமா?
தொற்றித் தான் தொலைத்திடுமா?

எல்லை கட்டா எடிசனும்
அணை போடா அப்துல்கலாமும்
ஆற்றிய சாதனை கண்டு
அறிவியலுலகு வியந்த்து

பில்கேட்ஸின் மனமானது
எல்லை கட்டியிருந்தால்
எலிப்பொறிக்குள் சிக்கிச்
சிதையாதிருந்திருப்போமோ?

விஞ்ஞானத்தின் விரிவிலே
பிரபஞ்சம் சுருங்கிவிட்டது
சுருங்கிய உள்ளங்களாலே
சுற்றமெல்லாம் வெகுதூரம்

விஞ்ஞானச் சுகங்கள்
அஞ்ஞானத்தில் தள்ளிட்டதால்
மெய்ஞானம் மறந்திட்ட
தாய்மை கூட பொய்த்த்து

அகிலமே எல்லை என்று
அகம் விரியட்டும்-அதிலே
விரிசல்  விழாதிருக்கட்டும்
வியனுலகு எட்டிடுவோம்

வானமே எல்லை என-மன
வாசல்கள் திறக்கட்டும்-அதில்
வாய்ப்புகள் வந்து குவியட்டும்
வாழ்த்துக்களால் வாழ்ந்திடுவோம்

மரம் ஏறிப் பழம் பறிப்போம்
வேர்களை வீழ்த்திவிடாது
கடலிறங்கி முத்தெடுப்போம்
மூழ்கியே போய்விடாது

விரிந்த எல்லையிலே
வியனுலகு தொட்டிடுவோம்
பரந்த எல்லையிலே
பயன் அனைத்தும் எய்திடுவோம்

சாதனைகள்,சாகசங்கள்
சோதனைகள்,வேதனைகள்
சேர்ந்தியங்குவது  தானே
வாழ்க்கைப் பயணம்

விஞ்ஞானத்திலே மனம் விரித்தால்
விந்தைகள் ஏராளம்-அறிவியற்
சோதனைகள்,சோதனைகளா?
சாதனைகளா?

மெய்ஞானத்திலே அகமாழ்ந்தால்
மென்மையும்,மேன்மையும்.
விண்ஞானம் உணர்ந்து
மெய்ஞானத்தால் மேன்மையடைவோம்!!

Thursday, August 5, 2010

மானுட வாழ்வு

மானுட    வாழ்வே
மலைப்பும்,மகிழ்வுமாய்
சிகரம் தொட எத்தனிக்கும்
மானுடனே!சீக்கிரம் தொட்டிடுவாய்
மலைப்பு  போக்கு!மலை மடுவாகும்!!
மகிழ்வு  நிலையாகும்!!

Tuesday, August 3, 2010

நம்பிக்கைப் பாலத்தில் காத்திருக்கிறேன்

ஓசோன் படலத்திலே 
ஓட்டையாம்!
பதப்படுத்தப்படுகிறது
காயும்,பழமும்!
சேதப்படுத்தப்படுகிறது
சுற்றுச்சூழல்!


                           விண்ணுக்கும்,மண்ணுக்கும்
                          பாலம் அமைப்போம்  -அது
                          வியனுலகு தொட்டிட வேண்டும்
                           விண்ணிலே ஒரு செய்தி!அது
                           மண்ணுலகு  சமன் செய்யட்டும்
                               
                            காத்திருக்கிறேன்!!

தேசீய நெடுஞ்சாலை


வளர்ந்து கொண்டேயிருக்கும்
வறுமை  தேசீய நெடுஞ்சாலை!-ஆனாலும்
வங்காரி மாத்தாய் உருவாக்கும் வளமையும்
தேசீய நெடுஞ்சாலை!!

                                 உருக்கென உறைந்து நிற்கும்
                                 உள்ளம் தீவிரவாதம்-தேசீய நெடுஞ்சாலை!
                                 உருக்காலே உயர்ந்து நிற்கும் உள்ளம்
                                 லட்சுமி மிட்டல்-தேசீய நெடுஞ்சாலை!!

       இன்னுயிர்கள் இன்பம் பெற
      விழைந்திடும் உள்ளம்-தேசீய நெடுஞ்சாலை!                                     இன்னுயிரை இம்சிப்பதால்
      இன்பம் பெறும் உள்ளமும்
      தேசீய நெடுஞ்சாலை!!

Monday, August 2, 2010

மின்னல் பொறிகள் சன்னலுக்குள்

மின்னல் பொறிகள் சன்னலுக்குள்
இருந்த காலம் மலையேறிவிட்டது
கன்னலாய் கருத்துக்கள் சொல்லி
காரியம் ஆற்றப்  புறப்பட்டுவிட்டாள்
மின்னல் பொறி!

                  வடை வைத்து எலி பிடித்தவள்-இன்று
                  எலி வைத்து வலை பிடிக்கிறாள்!
                  கணிப்பொறிக்குள் மின்னல்பொறி!
அவல் பொரி சமைத்தவள்-இன்று\
அகிலத்தையே  ?
சன்னல் தாண்டினாள்,
சாதனை புரிகிறாள்
மின்னல் பொறி!!