Sunday, April 8, 2012

விதிமுறைகள்?

சீச்.....சீ.........உன்னையா ?

சமாதானமா?
சண்டையிடு .

மன்னிப்பா?
பழி வாங்கு .

பெண்ணுக்குச் சமத்துவமா?
போகப் பொருளாக்கிப்
பொழுதைப் போக்கு .

அயலான் நேசமா?
அகப்பட்டதைச் சுருட்டி
வயிற்றைக் கழுவு .

எளியவனிடம் இரக்கமா?
எவன் சொன்னது?
வழி மறித்து வாயில் போடு .

கலாச்சாரமா?
கவலைப் படாதே
பண்பாடா?
உடைப்பில் போடு .
கண்டிப்பார்களா
உன்னையா ?சீ.....சீ
விலங்குகளுக்கு
ஏது விதிமுறைகள் ?

                                        -சூரியதாஸ்

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விலங்குகளுக்கு
ஏது விதிமுறைகள் ?//

அருமை. விலங்குகளில் கூட, விதிமுறைகள் ஏதுமின்றி வாழ்ந்தாலும் கூட, ஒருசில ஒழுங்குகளைக் கடைபிடித்து வருவதாகவே தெரிகிறது.

ஆனால் இந்த மனிதர்கள் தான் ..... ;(

Murugeswari Rajavel said...

வலைப்பூ வந்ததற்கும்,கருத்தினைத் தந்ததற்கும் நன்றி சார். சூரியதாஸின் இந்தக் கவிதை இன்றைய வாழ்க்கை முறையில் பலரின் செய்கைகளைப் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.