Wednesday, October 13, 2010

மானுடம் காப்போம்

சாலையோரமாக  நடந்து வந்து கொண்டிருந்த ஜெயபாலன்  தன்  சோலைக்குள்  நுழைந்தார்.ஆம்,அது  சோலை தான்.தென்னஞ்சோலை.தோப்பு என்பதை விட பூத்துக் காய்த்துக் குலுங்கிய அதனை சோலை என்பதே சாலப் பொருந்தும்.
                                                             ஒவ்வொரு  மரமாய்ப்  பார்த்துக்  கொண்டே சுற்றி வந்தவருக்கு  நேற்றைக்கு தன் மகனிடமிருந்து  வந்த  மின்னஞ்சல்  நினைவுக்கு  வந்த்து.
பச்சை அட்டை  வாங்கிக் கொண்டு அமெரிக்க குடியுரிமை  பெற்று  அங்கிருக்கும் மகன் எவ்வளவு  அழைத்த போதும் மறுத்து விட்ட  தந்தைக்கு  அங்கிருக்கும் காட்சிகளில் சிலவற்றைப்  பதிவு  செய்து  அனுப்பியிருந்தான்  விமல்.அதிலொன்று தான் இந்த  வனப்பு மிகு  வண்ண மரங்கள்.
                                                    அவரின்  எண்ண ஓட்டம்  சற்றே  பின்னோக்கி ஓடியது.சென்ற வாரம்  கலந்து  கொண்ட விவசாயக் கருத்தரங்கிலே பேசிய ஒரு விஷயம்  நினைவுக்கு  வந்த்து.புவி வெப்பமயமாதலுக்கு மரங்களை வெட்டுதலும்  காரணம்  என்றார்கள்.பசுஞ்சோலைக்குள்  நின்று கொண்டு வண்ண  மரங்களை  தரிசித்து வாழும் நான்  புவியில்  ஏற்படும் இப்பிரச்சனைக்கு  என்ன  செய்யப் போகிறேன்?மனதினுள்  எழுந்த  கேள்விக்கு  அப்போதே  பதிலும்  சொல்லிக் கொண்டார்.
மரக்கன்றுகளை  உருவாக்கி  அதைப் பல  தொண்டு  நிறுவனங்களின் மூலம்  நடச் செய்வது என்று.அதற்குத் தொடக்கமாக ஒரு மரக்கன்றை  எடுத்துச் சென்று அருகிலுள்ள  பள்ளி வளாகத்தில்  நட்டுவிட்டு வந்தார்.மனநிறைவுடன்  வீட்டுக்குள்  நுழைந்தவாறே  சொல்லிக் கொண்டார்.
''மரம்  வளர்ப்போம்  ,மானுடம்  காப்போம்''என்று

3 comments:

sathishsangkavi.blogspot.com said...

//''மரம் வளர்ப்போம் ,மானுடம் காப்போம்''//

உண்மையான வரிகள்....

S.RAJAVEL said...

Veettukoru maram valarpom. Nalla MANUDAM kappom.

Murugeswari Rajavel said...

உங்கள் இருவரின் கருத்துரைக்கு நன்றி.